இந்தியாவில் ரயில் பயண சேவை தொடங்கப்பட்டு 170 வருடங்களைத் தாண்டியுள்ளது.
ரயில் நிலையங்களில் நீல நிறத்தில் சில ரயில்களும், சிவப்பு நிறத்தில் சில ரயில்களும் இருக்கும்.
இந்த வண்ணங்கள் ரயிலின் அழகுக்காகவும், தோற்றத்திற்காகவும் இந்நிறம் பூசப்பட்டுள்ளதாக நினைத்திருப்பார்கள்.
சிவப்பு மற்றும் நீல வண்ண ரயில்கள் அதன் பெட்டிகள் தயாரிக்கும் இடங்களின் அடிப்படையில் இந்த வண்ணம் நிர்ணயிக்கப்படுகிறது.
நீல நிற ரயில் பெட்டிகள் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்படுகின்றன.
நீல நிறப் பெட்டிகள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டவை.
சிவப்பு நிற ரயில்பெட்டி தொழில்நுட்பம் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலாவில் சிவப்பு நிற ரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.