பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப்; மொக்க வாங்கிய கங்குவா – எவ்வளவு நஷ்டம்? மொத்த வசூல் இவ்வளவு தான்!
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் வசூலைவிட நஷ்டம் தான் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யாவின் கங்குவா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. படத்திற்கு படம் உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்க கூடிய நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஹிட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக சிங்கம் 2 படத்தை ஹிட் கொடுத்தார். அதன் பிறகு எந்த படமும் போதுமான அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் 'ஜெய்பீம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றபோதும், ஓடிடியில் இந்த படம் வெளியானதால், திரையரங்கு வெற்றியை தவறவிட்டது.
நடிகராக மட்டுமின்றி, ஒரு தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார் சூர்யா. சின்ன சின்ன பட்ஜெட்டில் எடுத்து பெரியளவில் ஹிட் கொடுத்து, வசூல் குவித்து வந்த சூர்யாவுக்கு சமீபகாலமாக எந்த படமும் போதுமான ரீச்சை கொடுக்கவில்லை. கடைசியாக வெளியான 'மெய்யழகன்' படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் குறைவு என்றே கூறப்பட்டது.
கங்குவா வசூல்:
இந்த நிலையில் தான் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படம் ஆரம்பத்திலேயே நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், இப்போது வசூலை விட அதிகளவில் நஷ்டத்தை சந்தித்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கங்குவா புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, படம் பாகுபலியை விட பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்றும், இந்தியளவில் இப்படியொரு படம் வந்திருக்காது என்பது போன்றும் பேசியிருந்தார். அதே போன்று ரூ.2000 கோடி வரையில் கங்குவா வசூல் குவிக்கும் கூட சொல்லியிருந்தார். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா படத்தில் சத்தம் அதிகமாக இருந்ததாகவும், எப்போதும் கத்திக் கொண்டே இருப்பதாகவும் பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
நஷ்டம் அடைந்த கங்குவா:
இதன் காரணமாக படத்தில் அதிகமாக சத்தம் கொண்ட முதல் 12 நிமிடத்தை குறைத்து மீண்டும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் கங்குவா உலகளவில் ரூ.108 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. ரூ.500 கோடிக்கும் அதிகமாக பாகுபலி ரேஞ்சுக்கு வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.108 கோடி வரையில் தான் வசூல் குவித்திருக்கிறது.
மேலும் சுமார் ரூ.80 கோடி வரை நஷ்டம் தான் படம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் படம் நஷ்டமா, லாபமா என்பது குறித்து தெரியவரும். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாபி தியோல், கருணாஸ், நட்டி நடராஜன், பிரேம்குமார், திஷா பதானி, கார்த்தி ஆகியோர் பலரும் நடித்திருந்தனர். கங்குவா படம் எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டாலும் இந்தப் படத்திற்காக சூர்யாவின் கடின உழைப்பு பாராட்டக்குரிய வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.