Suriya 44: சூர்யா 44 - படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே! அடுத்து நடந்த சம்பவம்..
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சூர்யா 44 திரைப்படத்தின் தனது காட்சிக்கான படப்பிடிப்பை பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளார்.
சூர்யா 44:
தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகனாவர். இதனைத்தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தவகையில் விஜயுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தார். ஆனாலும் கூட இவர் நடிப்பில் தொடர்ந்து வெளியான பல்வேறு படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை.
படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே:
இதனால் விரக்தியில் இருந்த பூஜா ஹெக்டே சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். அப்போது தான் நடிகர் சூர்யா நடிக்கும் அவருடைய 44வது படத்திற்கான அழைப்பு பூஜா ஹெக்டேவிற்கு வந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் நிகோபார் தீவுகளில் நடைபெற்றது. பின்னர் ஊட்டியிலும் படபிடிப்பு நடந்தது.
கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு:
இந்நிலையில், இப்படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளார். அந்தவகையில் பூஜா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதாவது சூர்யா 44 படத்தின் தான் சார்ந்த படபிடிப்பை பூஜா ஹெக்டே முடித்ததற்காக அவருக்கு படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.
தற்போது சூர்யா 44 மற்றும் ஹிந்தியில் சாகித் கபூர் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தேவா ஆகிய படங்கள் மட்டுமே பூஜா ஹெக்டே கைவசம் இருக்கின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் 2025 ஆம் ஆண்டு திரையங்கிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Black Trailer: ஜீவா - பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளாக் படத்தின் டிரைலர் வெளியானது
மேலும் படிக்க: Rajinikanth: தேடிச்சென்று கேட்ட ரஜினிகாந்த்! வைராக்கியமாய் மறுத்த வைரமுத்து - என்ன நடந்தது?