மேலும் அறிய

Suriya 44 : சூர்யா படத்தில் எவர்கிரீன் நடிகை சிறப்பு தோற்றம்...சூர்யா 44 அப்டேட்

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா 44

ஒரு பக்கம் கங்குவா ரிலீஸூக்காக காத்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44 -வது படமாக உருவாகும் இப்படத்தில் ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , பூஜா ஹெக்டே , கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்கள் முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக மாலத்தீவில் நடைபெற்ற படப்பிடிப்பு பின் அடுத்தகட்டமாக நீலகிரியில் நடந்து வருகிறது. 

தொடர் பிரச்னைகளை சந்திக்கு சூர்யா படப்பிடிப்பு

சூர்யா 44 படம் தொடங்கியது முதல் படக்குழு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புன் போது நடிகர் சூர்யா தலையில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா ஒரு சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பிற்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை படத்தில் நடிக்க வைத்தது குறித்து படக்குழுவினர் மீது புகாரளிக்கப்பட்டது. பின் காவல்துறை விசாரணைக்குப் பின் மீண்டும் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

சிறப்பு தோற்றத்தில் ஸ்ரேயா சரண்

அடுத்தடுத்த சவால்களை எதிர்கொண்ட பின் தற்போது இப்படம் குறித்த மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது . முந்தைய தகவல்களைப் போல் இல்லாமல் இத்தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சூர்யா 44 படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு ஷெரிஃப் மாஸ்டர் நடனம் கற்பித்துள்ளார். 

ஸ்ரேயா சரண்

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்டரே கோஸ்சீவை மணந்த ஸ்ரேயாவுக்கு சென்ற 2021ஆம் ஆண்டு ராதா எனும் பெண் குழந்தை பிறந்தது. தற்போது 41 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைதளத்திலும் அவ்வப்போது தனது குடும்பத்துடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஸ்ரேயா சரண் யாரும் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டார். அவரை இன்னும் நிறைய படங்களில் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். தற்போது  நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் இடம்பெறும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget