Suriya 42: சிறுத்தை சிவாவின் கனவுப்படம்.. தொடங்கியது சூர்யா 42 பூஜை.. முழுவிபரம் உள்ளே!
சூர்யா- சிறுத்தை சிவா இணையும் புதியப்படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.
![Suriya 42: சிறுத்தை சிவாவின் கனவுப்படம்.. தொடங்கியது சூர்யா 42 பூஜை.. முழுவிபரம் உள்ளே! Suriya 42 Update Surya Siruthai Siva Movie Begins With Pooja Know Details Suriya 42: சிறுத்தை சிவாவின் கனவுப்படம்.. தொடங்கியது சூர்யா 42 பூஜை.. முழுவிபரம் உள்ளே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/21/7e955574e4a5397f3de5057ee0ff84651661063132272175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சூர்யா- சிறுத்தை சிவா இணையும் புதியப்படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.
சூர்யாவின் 42 ஆவது படத்தை ‘சிறுத்தை’, ‘ வீரம்’ ‘வேதாளம்’ ‘ அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். ‘சிங்கம் 1 மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இசையமைப்பாளராக கைகோர்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பதின் மூலம் பாலிவுட் நடிகை ‘திஷா பதானி’ தமிழில் அறிமுகமாகியுள்ளார்.நடிகர் மகத் இந்தப்படத்தில் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவாவின் கனவுப்படமான ‘சூர்யா42’ -வை சிவாவும் ஆதி நாராயணாவும் இணைந்து எழுதியுள்ளனர். பிரபல பாடலாசிரியரான மதன் கார்கி இந்தப்படத்திற்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரான K.E. ஞானவேல்ராஜா இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தின் பூஜையான இன்று சென்னையில் நடந்துள்ளது.
'எதற்கு துணிந்தவன்' வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘பிதாமகன்’ திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பற்றி சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடிவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார்.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாடிவாசல் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அண்மையில் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
முன்னதாக, ‘வாடிவாசல்’ படத்தை பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருந்த போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாமல் நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காக பாடல்கள் இருக்கும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)