Suriya 42 Motion Poster: ‛கேஜிஎஃப் மியூசிக் போல இருக்கே...’ சர்சையில் சூர்யா 42 போஸ்டர்!
வெளியானது சூர்யா 42 மோஷன் போஸ்டர்.. எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றியதா சிறுத்தை சூர்யாவின் படம்
இயக்குநர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடுவதாக நேற்று தகவல் வந்தது. சொன்னது போல், இன்று காலை 10 மணிக்கு ஸ்டியோ க்ரின் பக்கத்தில் வெளியானது.
View this post on Instagram
இப்படம் 10 மொழிகளில் இயக்கப்படும் என்றும் இது ஒரு பான் இந்திய தயாரிப்பாக உருவாகும் என முன்னரே அறிவிப்பு வந்தது. அதற்கு ஏற்றவாரு இப்படம் முப்பரிமாணத்தில் வெளியாகவுள்ளது. வழக்கம் போல் கிராமத்து கதைகளில், பழைய சென்டிமெண்ட் கதையாக இருக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இன்று மோஷன் போஸ்டர் வெளியானது.
The Majestic...Stunning & Prestigious Mega Project.#Suriya42MotionPoster Video link is here. 🏆
— Studio Green (@StudioGreen2) September 9, 2022
🔗: https://t.co/p2PcCCnEtu#Suriya42 @Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @UV_Creations #Vamsi #Pramod @kegvraja @ThisIsDSP @iYogiBabu @vetrivisuals
உள்ளே சென்று பார்த்தவுடன் ஒரு கழுகு ஓரமாக பறந்து சென்றது. பின்னர், அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர் , முக்காடர், பெருமனத்தார் என கதாப்பாத்திரங்களின் பெயர்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்தது. சரி, திரும்பவும் பார்க்கலாம் என்று கவனித்த போது கே.ஜி.எஃப் படத்தின் பின்ணனி இசையை போன்றே அச்சு அசலாக பயன்படுத்திருக்கிறார் டி.எஸ்.பி. பின்னர், கையில் கோடாலியுடனும் முதுகில்
வில்லுடனும் ஒரு வீரர் போர் களத்தில் நின்று கொண்ட காட்சி வந்தது. இறுதியில், பறந்து கொண்ட கழகு அந்த நபரின் மேல் அமர்ந்தது. அந்த நபர் வேறு யாரும் இல்லை, படத்தின் கதா நாயகன் சூர்யாதான்.
டி.எஸ்.பி - சூர்யா காம்போவிற்கு எதிர்ப்பார்ப்புகள் இருந்த நிலையில், சிங்கத்துக்கு இசையமைத்தது இவர்தான என்ற அளவுக்கு, ஏமாற்றத்தை தந்துள்ளது சூர்யா 42 போஸ்டர். இப்படத்தின் சூட்டிங் விரைவில் துவங்களாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பழங்காலத்து கதை, கேங்ஸ்டர் கதையை வைத்துதான் பான் இந்திய படம் இயக்குவார்களா என்றும் பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் பலர் ட்ரால் செய்தாலும், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பாசிட்டிவான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர் .
கே.ஜி.எப்., பின்னணி இசை போலவே, இருக்கிறது... படமும் அப்படி தானா என்பது போன்ற கமெண்ட்களும் வந்து கொண்டிருக்கிறது.