மேலும் அறிய

Resort Web Series: என் வாழ்க்கையே போச்சு.. எருமசாணி விஜயகுமார் மீது புகார்.. கதறி அழுத துணை நடிகை!

3 முறை ஆடிஷனுக்கான கேரளாவில் இருந்து வந்தேன். 90 சதவிகிதம் நீங்கள் தான் ஹீரோயின் கேரக்டர் என சொன்னார்கள் என எருமசாணி விஜயகுமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை துணை நடிகை வைத்துள்ளார்.

எருமசாணி விஜயகுமாரால் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை இழந்து விட்டதாக  துணை நடிகை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அதில் பேசும் பெண் நான் ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்த ரிசார்ட் வெப் சீரிஸில் ஸ்ரீநிதி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக ஓராண்டுக்கு கால்ஷீட் வேண்டும் என ஒப்பந்தம் செய்தார்கள். வெப் சீரிஸூக்கு முன்பு சொன்னதும், இப்போது நடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக இந்த பிரச்னை பெரிதாகி கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக நான் தயாரிப்பு தரப்பில் பேசினேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. 

எல்லாரும் எருமசாணி விஜயகுமார் தான் இந்த வெப் சீரிஸ் தயாரிப்புக்கான  தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவரிடம் தான் பேச வேண்டும் என சொல்கிறார். அவரிடம் போய் கேட்டால் தயாரிப்பு தரப்பை கை காட்டுகிறார்கள். ஓராண்டுக்கு ஒப்பந்தம் போட்டு விட்டு என்னை முடக்கி விட்டார்கள். என்னிடம் மோசடி செய்தார்கள். கடந்த 4 மாதமாக எந்த வேலையும் இல்லை. தயாரிப்பு தரப்பிடம் கேட்டால் ஷூட்டிங் இருக்கு, உங்களுக்கு பெரிய கேரக்டர் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. 

ஹாட் ஸ்டாரில் இன்னொரு ப்ராஜெக்டில் நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் ரிசார்ட் தயாரிப்பு தரப்பில் விடவில்லை. எனக்கு சம்பளம் கூட வரவில்லை. நான் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். எருமசாணி விஜயகுமார் தான் என்னை வெப் சீரிஸில் நடிக்க அணுகினார். அவர் நல்ல பிரபலம், நல்ல டீம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

3 முறை ஆடிஷனுக்கான கேரளாவில் இருந்து வந்தேன். 90 சதவிகிதம் நீங்கள் தான் ஹீரோயின் கேரக்டர் என சொன்னார்கள். நான் சம்பளம் வரவில்லை என கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். ஷூட்டிங்கே இல்லாமல் ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். எனக்கு வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என் நண்பர் விஜயகுமாரிடம் பணம் கேட்டபோது நடிக்க வேண்டாம். இனிமேல் வர வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள். நான் எப்படி இருக்கிறேன் என மனிதாபிமானதிற்கு கூட கேட்கவில்லை. 

நான் இப்படி வீடியோ வெளியிட்டால் நிச்சயம் என் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்பது தெரியும். நான் யாரிடம் சென்று முறையிட என தெரியவில்லை. நடிப்புத்துறையில் இருப்பவர்களுக்கு 7,8 மாதங்கள் வேலையில்லாமல் இருப்பது ஒன்றும் சாதாரணமானது கிடையாது. விஜயகுமாரின் மனைவி நக்‌ஷத்ராவும் என்னை அவதூறாக பேசுகிறார். இந்த வெப் சீரிஸை குளோபல் வில்லேஜ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அவர்களைப் போல நடிக்க வருபவர்களை மட்டமாக நடத்தும் நிறுவனத்தைப் பார்த்தது இல்லை.

இதுபோன்ற பிரச்னை வேறு ஒருத்தருக்கு நடக்கக்கூடாது என்று தான் வீடியோ வெளியிட்டேன். நான் குறும்படத்தில் நடித்து போராடி தான் நடிக்க வாய்ப்பு பெற்றேன். எல்லா தப்பும் என்மேல் போடுறாங்க. நீங்க தானே நடிக்க வந்தீங்க என சொல்கிறார்கள். என்னோட சம்பளத்தை தானே கேட்டேன். ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய சூழலை இவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.  இப்படி ஏமாற்றுபவர்கள் இருப்பதால் தான் சினிமாவில் போகவே எல்லாரும் பயப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Embed widget