மேலும் அறிய

திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?

நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் ரோடுஷோ மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்: இடைத்தேர்தலை குறிவைத்து காய்நகர்த்தல் என அரசியல் வட்டாரங்கள் தகவல்

டிச.1-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திருச்சி சென்று வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நவ.20-ஆம் தேதியன்று முதல்வர் திருச்சி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உயிரிழந்ததன் காரணமாக அந்தப்பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த 23-அம் தேதி திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,அன்றைய தினம் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இடைத்தேர்தலை குறிவைக்கும் முதல்வர்?

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற தவெக, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் இருதொகுதிகளிலும் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

மொத்தமாக காலியான 7 தொகுதிகளுள் இரு தொகுதிகளுக்கு இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் கொளத்தூர் எம்.எல்.ஏ உயிரிழந்த நிலையில் அத்தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை நோக்கி காய்களை நகர்த்தி வரும் முதல்வர் விஜய், நவ.3-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று, சாலைவலமும் வந்து மக்களை ஆரவாரப்படுத்தினார். இதனையடுத்து கடந்த 14-ஆம் தேதியன்று அம்பாசமுத்திரத்தில் பள்ளிவிழா ஒன்றிலும் பங்கேற்க திட்டமிட்டார்.

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுள் ஒன்றான திருச்சி கிழக்கை மையப்படுத்தி வருகிற ஒன்றாம் தேதியன்று நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்து ரோடுஷோ மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்னும் வரவிருக்கும் நாட்களில் மீதமுள்ள தொகுதிகளிலும் முதல்வர் விஜய் தீவிரக்கவனம் செலுத்தக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிருக்கு சூப்பர் அறிவிப்பு! ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடு, ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள்! முழு விவரம் இதோ!
மகளிருக்கு சூப்பர் அறிவிப்பு! ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடு, ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள்! முழு விவரம் இதோ!
"இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்" - ஸ்டாலினிடம் ராகுல் காந்தி பேசியது என்ன?
சிவகங்கையில் 13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு வெளிப்படுத்திய புதிய வரலாறு !
சிவகங்கையில் 13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு வெளிப்படுத்திய புதிய வரலாறு !
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனை! நாளைக்குள் மீதித்தொகையை செலுத்த கெடு... கால அவகாசம் நீட்டிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனை! நாளைக்குள் மீதித்தொகையை செலுத்த கெடு... கால அவகாசம் நீட்டிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
"இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்" - ஸ்டாலினிடம் ராகுல் காந்தி பேசியது என்ன?
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
Tamilnadu Government: யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
Tamilnadu Government: யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
Embed widget