மேலும் அறிய

Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!

Delimitation: சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்து வந்த ஆலோசனை நிறைவு பெற்று இந்தியா கூட்டணி தலைவர்கள் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்தனர்.

இந்தியா கூட்டணி தலைவர்கள்

இதற்காக டெல்லியில் இருந்து இரண்டு தனி விமானங்கள் மூலம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்ட 21 தலைவர்கள் டெல்லியிலிருந்து 2 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்.

இதையும் படிங்க: MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்

மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை

இதில் கர்நாடகா மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகிய 3 மாநில காங்கிரஸ் முதல்வர்களும் இடம் பெற்றிருந்தனர். சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே வேனில் டிரைடென்ட் ஹோட்டலுக்குச் சென்ற இந்தியா கூட்டணித் தலைவர்கள், அங்கு மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு மாலை 4.40 மணியளவில் வருகை தந்தனர்.

வாசலுக்கு வந்து வழியனுப்பி ஸ்டாலின்

அப்போது  சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது ராகுல் காந்தியை பழைய பாசத்துடன் பொன்னாடை போர்த்தி கட்டி அணைத்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்து வந்த ஆலோசனை நிறைவு பெற்று இந்தியா கூட்டணி தலைவர்கள் புறப்பட்ட போது மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து வழியனுப்பினார். 

மறுவரையறை மசோதா ஆதரவு

இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களில் திமுக ஐடி விங் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு நிலைப்பாட்டில்  திமுக அதே உறுதியோடு இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறையில் தி.மு.க. நிலைப்பாடு ஏமாற்றம்! உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் – திருமுருகன் காந்தி வலியுறுத்தல்!
தொகுதி மறுவரையறையில் தி.மு.க. நிலைப்பாடு ஏமாற்றம்! உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் – திருமுருகன் காந்தி வலியுறுத்தல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Siraj: மாற்று வீரராக கூட வாய்ப்பில்லையா? வஞ்சிக்கப்படும் முகமது சிராஜ்? விளாசும் ரசிகர்கள்!
Siraj: மாற்று வீரராக கூட வாய்ப்பில்லையா? வஞ்சிக்கப்படும் முகமது சிராஜ்? விளாசும் ரசிகர்கள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
Tamilnadu Government: யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
Tamilnadu Government: யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
MK Stalin: அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
Embed widget