பாகுபலி-2வை பந்தாடிய ராமாயணா! - துரந்தர்-2 தான் அடுத்த டார்கெட்! இத்தனை கோடி வசூலா?
ராமாயணா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2028-ஆம் ஆண்டு வெளியாகக்கூடுமெனவும் சினிமா வட்டாரங்கள் தகவல்

ராமாயணா முதலாம் பாகம் திரைப்படம் உலகளவில் ரூ.1,800 கோடிக்கு மேல் வசூலித்து புது சாதனை படைத்துள்ளது.
ராமாயணா முதலாம் பாகம்
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ராமாயணா முதலாம் பாகத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பட்ஜெட்டுடனும் பிரம்மாண்ட வடிவமைப்புகளுடனும் உருவான இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்திருந்தனர்.
24 நாட்களில் வாரங்களில் ரூ.1800 கோடி வசூல்
ராமாயணா முதலாம் பாகம் திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி திரைக்கு வந்தது முதலே தனது வசூல்வேட்டையை ஆரம்பித்த நிலையில், தற்போது 24 நாட்களில் ரூ.1,800 கோடி வசூலை ஈட்டியுள்ளது. மேலும் இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகுபலி-2 காலி: துரந்தர்-2 தான் அடுத்த டார்கெட்!
ராமாயணா முதலாம் பாகம் அதிகவசூலை குவித்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், ஏற்கனவே ரூ. 1350.83 கோடியை வசூலித்திருந்த துரந்தர் திரைப்படம் மற்றும் ரூ.1780 கோடியை வசூலித்திருந்த பாகுபலி - 2 ஆகியவற்றின் வசூலை மிஞ்சி அதன் இடத்தை கைப்பற்றியுள்ளது. மேலும், வருங்காலத்தில் ரூ.1852.44 கோடி வசூலித்த துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூலையும் கடக்குமென கணிப்புகள் வெளியாகி உள்ளன. ராமாயணா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2028-ஆம் ஆண்டு வெளியாகக்கூடுமெனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























