மேலும் அறிய

Rajinikanth on Taanakkaran: ”கனவுல கூட நினைக்காததை சாதிச்சிட்டேன்” : ரஜினியின் வாழ்த்தில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு

டாணாக்காரன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

டாணாக்காரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விக்ரம் பிரபு, “  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் அழைத்து டாணாக்காரன் படத்தில் எனது நடிப்பை பற்றி பேசி பாராட்டினார். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று சொல்லத்தெரியவில்லை. அவர் நான் கனவில் கூட நினைக்காத சாதனை இது. தீவிரமாக காதல் செய்யும் ஒன்றை, நாம் தொடர்ந்து செய்யும்போது இது போன்ற அற்புதமான தருணங்கள் நமது வாழ்வில் நடக்கும். இப்படி ஒரு படத்தை எடுத்த படக்குழுவுக்கு  “ஹாட்ஸ் ஆஃப், கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.” என்று பதிவிட்டு இருக்கிறார். 

Taanakkaran Movie Review:

வெற்றிமாறனின் உதவி இயக்குநரான தமிழ் இயக்கியிருக்கும் இந்தப்படம் கடந்த சில நாட்களாக மக்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், போஸ் வெங்கட், எம். எஸ். பாஸ்கர், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அப்பாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்படும் விக்ரம் பிரபு, போலீஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்று லட்சயத்தோடு போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வர, அவருடன் 82 களில் ஆட்சி கலைப்பால் ஆணை வழங்கப்பட்ட பின்னரும், காலம் தாழ்த்தப்பட்ட வயதானவர்களும் இணைகின்றனர்.

இந்தக்கூட்டத்தில் பள்ளிக்குள் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கும் இளைஞராக விக்ரம் இருக்க, அது பள்ளியை வழி நடத்தும் அதிகாரிகளுக்கு இடையூறாக மாறுகிறது. இந்த இடையூறு ஒரு கட்டத்தில் கெளரவ பிரச்னையாக மாற, இறுதியில் விக்ரம் பிரபு தனது லட்சியத்தை நிறைவேற்றினாரா கெளரவப் போட்டியில் ஜெயித்தது யார் உள்ளிட்டவைகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை..

அப்பாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்படும் விக்ரம் பிரபு, போலீஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்று லட்சயத்தோடு போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வர, அவருடன் 82 களில் ஆட்சி கலைப்பால் ஆணை வழங்கப்பட்ட பின்னரும், காலம் தாழ்த்தப்பட்ட வயதானவர்களும் இணைகின்றனர். இந்தக்கூட்டத்தில் பள்ளிக்குள் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கும் இளைஞராக விக்ரம் இருக்க, அது பள்ளியை வழி நடத்தும் அதிகாரிகளுக்கு இடையூறாக மாறுகிறது. இந்த இடையூறு ஒரு கட்டத்தில் கெளரவ பிரச்னையாக மாற, இறுதியில் விக்ரம் பிரபு தனது லட்சியத்தை நிறைவேற்றினாரா கெளரவப் போட்டியில் ஜெயித்தது யார் உள்ளிட்டவைகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.. நீண்ட நாட்களாக ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்த விக்ரம் பிரபுவிற்கு, ‘டாணாக்காரன்’ அதைக்கொடுத்திருக்கிறது. இயல்பாகவே அவரிடம் இருக்கும் நிதானம்,இந்தப்படத்தில் அவர் ஏற்று நடித்த அறிவு கதாபாத்திரத்திற்கு பெரும்பலமாய் அமைந்திருக்கிறது. சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அடுத்ததாக படத்தின் பெரும்பலமாக அமைந்திருப்பது படத்தின் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள்.

                                              Rajinikanth on Taanakkaran: ”கனவுல கூட நினைக்காததை சாதிச்சிட்டேன்” : ரஜினியின் வாழ்த்தில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு

ஈகோவின் வடிவமாக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் வரும் லால், எதிர்க்கவும் முடியாமல், விலக முடியாமல் தவிப்பில் வாழும் செல்லக்கண்ணு கதாபாத்திரத்திரல் வரும் எம்.எஸ். பாஸ்கர், நேர்மை தவறாத போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட், மதுசூதனராவ், சித்தப்பா கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனித்தனியாக நம் மனதில் நிற்கின்றன.  

கதைக்களம் பயிற்சி பள்ளியை சுற்றியே நடந்தாலும், அதனை கனக்கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். அஞ்சலி நாயருக்கும், விக்ரம் பிரபுவுக்கும் இடையேயான காதல் ஒட்டவே இல்லை. அதே போல படத்தில் பெண்களை பெற்றதால், வேறு வழியே இல்லாமல் பயிற்சி பள்ளிக்கு வருகிறோம் என்று வயதானவர்கள் கூறுவது நெருடலை ஏற்படுத்துகிறது.

                                              Rajinikanth on Taanakkaran: ”கனவுல கூட நினைக்காததை சாதிச்சிட்டேன்” : ரஜினியின் வாழ்த்தில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு

படத்தின் களம் பயிற்சி பள்ளிக்குள்ளையே நடப்பதால், ஆடியன்ஸ் தோய்வடையாமல் இருக்க காட்சிகள் சுவாரஸ்சியமானதாக இருந்திருக்க வேண்டும். அதை கொஞ்சம் கோட்டை விட்டு இருக்கிறார் இயக்குநர். இறுதியில் விரக்தியில் உட்கார்ந்திருக்கும் விக்ரம் போன்ற பல இளைஞர்களுக்கு அதிகாரத்தை அதிகாரத்தால் ஜெயிக்க வேண்டும் என்று கூறி உத்வேக அளித்திருப்பது சிறப்பு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Embed widget