மேலும் அறிய

Rajinikanth: படையப்பா கதை ஓனர் நான் தான்.. அந்த படம் எடுக்க காரணம் இதுதான்.. ரஜினி ஓபன் டாக்!

நான் 21ம் ஆண்டில் இருக்கும்போதே 25ம் ஆண்டில் படம் நடிக்கும்போது சொந்தமாக தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். படையப்பா படத்தின் மூலக்கதை நான் தான் உருவாக்கினேன்.

தான் நடித்த படையப்பா படத்தின் மூலக்கதை எங்கிருந்து உருவானது என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரீ-ரிலீசாகும் படையப்பா படம்

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் டிசம்பர் 12ம் தேதி அவர் நடித்த படையப்பா படம் மீண்டும் ரீ-ரிலீசாகிறது. இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், லட்சுமி, அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார், செந்தில், ரமேஷ் கண்ணா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் சுப்பர் ஹிட் ஆனது. 

மனம் திறந்த ரஜினி

இந்த நிலையில் படையப்பா படம் ரீ-ரிலீசாவதால் ரஜினிகாந்த் மனம் திறந்து நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், “1999ல் படையப்பா படம் வெளியானது. நான் 1975ம் ஆண்டு சினிமாவுக்கு நடிக்க வந்தேன். என்னுடைய 25ம் ஆண்டில் அந்த படம் வெளியானது. நான் 21ம் ஆண்டில் இருக்கும்போதே 25ம் ஆண்டில் படம் நடிக்கும்போது சொந்தமாக தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். படையப்பா படத்தின் மூலக்கதை நான் தான் உருவாக்கினேன். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதில் வரும் நந்தினியின் கேரக்டர் ரொம்ப பிடித்திருந்தது. அதனை மையமாக கொண்டு ஒரு முழு படம் பண்ண வேண்டும் என்பது 2, 3 ஆண்டுகளாக என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அப்படி உருவானது தான் படையப்பா. 

அந்த கதையை நான் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. நான் திரைக்கதை பண்ணுகிறேன் என சொன்னார். அதன்படி திரைக்கதை மற்றும் வசனம் அருமையாக பண்ணினார். டைட்டில் என்ன வைக்கலாம் என யோசித்தபோது எனக்கே தெரியாமல் சட்டென வாயில் இருந்து படையப்பா என்ற வார்த்தை வந்தது. என்னுடைய நிறைய படங்களுக்கு அப்படித்தான் திடீரென தோன்றும் வார்த்தைகளை டைட்டிலாக சொல்லுவேன். 

உதாரணமாக அண்ணாமலை, பாட்ஷா, வீரா, முத்து ஆகிய படங்களை சொல்லலாம். படையப்பா டைட்டிலை கேட்டுவிட்டு கேள்விப்படாத ஒன்றாக உள்ளதே என கே.எஸ்.ரவிகுமார் சொன்னார். ஆனால் பழைய டைட்டிலாக இருக்கிறதே என கூறினார். படை, சொரி என பேசுவார்களே என கே.எஸ்.ரவிகுமார் யோசித்தார். அதெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம் என நான் சொன்னேன். 

இதற்கிடையில் நான் தயானந்த சரஸ்வதியை அடிக்கடி சந்தித்து ஆன்மிக விஷயங்களைப் பற்றி பேசுவேன். அப்படியாக ஒருமுறை பேசும்போது அடுத்த படம் பற்றி சொன்னேன். படையப்பா படத்தின் கதையை கேட்டு விட்டு கதை நல்லாருக்கே, அந்த பெயர் முருகனுடையது. ஆறுபடையப்பன் என வைத்து வேல் கொண்டு டைட்டில் எல்லாம் பண்ணினோம்” என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
Vaiyapuri: மீம்ஸால் பறிபோன லோகேஷ் பட வாய்ப்பு.. விஜய் படத்தால் நடந்த சம்பவம்.. வையாபுரி வருத்தம்!
Vaiyapuri: மீம்ஸால் பறிபோன லோகேஷ் பட வாய்ப்பு.. விஜய் படத்தால் நடந்த சம்பவம்.. வையாபுரி வருத்தம்!
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
Ration Card : ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
Embed widget