சர்க்கரையை கட்டுப்படுத்த இயற்கையான வழிமுறைகளை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற அடிப்படையான உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்துவர வேண்டும்.

Image Source: Canva

ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது ஆகும். இது சர்க்கரை வியாதியை அதிகரிக்கும்.

Image Source: Canva

உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம்தான் மிகவும் முக்கியம் ஆகும். மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

Image Source: Canva

புகைப்பிடித்தல் உடலுக்கு பல தீங்கை உண்டாக்கும். புகைப்பிடிப்பது நரம்பு, இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.புகைப்பழக்கம் இல்லாமல் இருப்பது சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

Image Source: Canva

ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நார்ச்சத்து உள்ள உணவுகள் பாதுகாக்கிறது. பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Canva

தண்ணீர் உடலுக்கு போதுமான அளவு குடிக்க வேண்டும். உடலில் உள்ள அதிகப்படியான குளுகோஸை சிறுநீர் மூலமாக வெளியேற்ற தண்ணீர் மிக மிக அவசியம். நீர் வறட்சியைத் தடுக்கும்.

Image Source: Canva

சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உடல் எடையை பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை கடுமையான பல வியாதிகளை உண்டாக்கும்.

Image Source: Canva

மது உடலின் பல பாகங்களை சீரழிக்கும். கல்லீரல் செயல்பாட்டை பாதிப்பதுடன் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர்குலைக்கிறது.

Image Source: Canva

சரியான அளவு தூங்காவிட்டால் உடலில் பல சிக்கல்கள் உண்டாகும். போதுமான அளவு உடலுக்கு சுறுசுறுப்பை அளிப்பதுடன் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் சர்க்கரை அளவை சரியான அளவில் நிர்வகிக்கும்.

Image Source: Canva

புரதம், நீர்ச்சத்து என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் உணவை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: Canva