மேலும் அறிய

YouTube சேனல் ஆரமித்து தருவதாக ஏமாற்றிய நபர் !- கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பாடகி ராஜலட்சுமி!

”உங்கள் முகத்தால் மட்டுமே வியூஸ் வந்துவிடாது, அதற்கு பின்னால் எனது உழைப்பும் உள்ளது ”என அந்த நபர் காட்டமாக பேசியுள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக  கிராமிய பாடல்களை முன்னிறுத்தி பிரபலமானவர்கள்  செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். கிராமத்து தெம்மாங்கு பாடல்கள் பாடுவதில் கில்லாடியான இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரியில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் பாடகி ராஜலட்சுமி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக ராஜலட்சுமி , செந்தில் தம்பதிகளுக்கு பரீட்சியமான ஒரு நபர் , யூடியூப் கணக்கு ஒன்று தொடங்கலாம் அதனை நானே செய்து தருகிறேன் என அனுகியுள்ளார். அக்கா என அழைத்த ஒரே காரணத்தால், நம்மை ஏமாற்ற மாட்டார் என நினைத்தாராம் ராஜலட்சுமி. ஆரம்பத்தில் அது குறித்த புரிதல் தங்களுக்கு இல்லை என கூறும் ராஜலட்சுமி , அந்த நபருக்கு மாத சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து , அரிதாரம் என்னும் யூடியூப் சேனலை தொடங்கியதாக கூறுகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த காலக்கட்டம் என்பதால் ,தம்பதிகள் பிஸியாக இருந்துள்ளனர் . அப்போது மாதம் அதிகபட்சமாக 4 வீடியோக்கள் மட்டுமே பதிவு செய்ய முடிந்ததாம். வீடியோக்கள் எடுப்பது, அதனை எடிட் செய்வது போன்ற வேலைகளை , அந்த நபர் செய்யமாட்டாராம். நிர்வாக பொறுப்பை மட்டுமே அவர் வகித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்களுக்கு மேனேஜராக , யூடியூபில் பணிபுரிந்த ஒரு நபரை பணியமர்த்தியுள்ளனர் செந்தில்- ராஜலட்சுமி தம்பதிகள். அவருக்கு அரிதாரம் யூடியூப் சேனல் குறித்து தெரிய வரவே, இதில் நிறைய தவறாகவுள்ளது. இந்த சேனலை நிர்வகிக்க மட்டும் 15 ஆயிரம் என்பது அதிகமான தொகை என நிலைமையை எடுத்துக்கூறினாராம். உடனே ராஜலட்சுமி யூடியூப் நிர்வாகி தம்பியிடம், “நீங்க இதுவரை செய்த உதவிக்கு நன்றி, சேனலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்“ என கூறினாராம். 

YouTube சேனல் ஆரமித்து தருவதாக ஏமாற்றிய நபர் !- கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பாடகி ராஜலட்சுமி!
ஆனால் அந்த நபரோ , இதில் நான் வேலை செய்யவில்லை, இந்த சேனலில் நானும் பங்குதாரார் . இந்த சேனலின் உரிமையாளர் நான், உங்களை புரமோட் செய்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்றுதான்  உதவினேன் , வருகிற வருமானத்தில் இருவருக்கும் சரிபாதியாக பங்குண்டு என கூறியுள்ளார். உங்கள் முகத்தால் மட்டுமே வியூஸ் வந்துவிடாது, அதற்கு பின்னால் எனது உழைப்பும் உள்ளது என காட்டமாக பேசியுள்ளார். பின்னர் தனது வீடியோவை மட்டும் அந்த பக்கத்திலிருந்து டெலிட் செய்துவிட்டு 85 ஆயிரம் ஃபாலோவர்ஸ் கொண்ட அரிதாரம் யூடியூப் பக்கத்தை அந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார் ராஜலட்சுமி.  ஆனால் அது தங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர நேரம் எடுத்ததாகவும் தெரிவிக்கிறார். அதன் பிறகு செந்தில் ராஜலட்சுமி என்ற பெயரில் யூடியூப் பக்கத்தை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு தற்போது சில்வர் பட்டன் விருதையும் வாங்கியுள்ளார் ராஜலட்சுமி.

YouTube சேனல் ஆரமித்து தருவதாக ஏமாற்றிய நபர் !- கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பாடகி ராஜலட்சுமி!

இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துக்கொண்ட அவர்  யூடியூப் பக்கம் தொடங்க வேண்டுமானால் , தனி நபரை நாடுவதை விட அதற்காக செயல்படும் நிறுவனங்களை நாடுங்கல். மேலும் என்னதான் தெரிந்த நபராக இருந்தாலும் , அவர் யூடியூப் பக்கத்தை தொடங்கி தருவதாக இருந்தால் அவருடன் ஒப்பந்தம் செய்துக்கொள்வது அவசியம் என தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget