மேலும் அறிய

Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!

Sun Kudumba Rasi Palan: பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலின் கதாநாயகிகளுக்கு இந்த வாரம் ராசிபலன் என்ன என, குடும்ப ராசிபலன் சொல்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

கடவுள் நம்பிக்கை என்பது எப்போதும் இரு பிரிவாகவே இருந்து வருகிறது. அதில் கடவுளை நம்பும் பிரிவு ஒன்று, மற்றொன்று கடவுளை நம்பாத பிரிவு. ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,  ராசிபலன் என்றாலே அனைவருக்குள்ளும் ஒரு ஆவல் உருவாகி விடுகிறது. அந்த ஆவல் நமக்கு என்னதான்  ராசிபலனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஒரு ஆர்வத்துடன் தயாராகிவிடுகிறோம். ஆனால் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போவது உங்களுக்கான ராசிபலனோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கான ராசிபலனோ இல்லை. தமிழ் தெரிந்த பெரும்பாலான வீட்டில் குடும்பமே கொண்டாடி வரும் சீரியல் கதாபாத்திரங்களுக்கான ராசிபலன் என்ன என்பது தான். 

அண்மைக்காலங்களில் வெள்ளித்திரையைப் போலவே சின்னைத்திரை மீது மக்களுக்கு பெரும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு  காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்க்கிறார்கள் என்ற பொது கண்ணோட்டம் மாறி அனைவருமே சீரியல்களைப் பார்க்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஸ்மார்ட் போன் வந்த பிறகு பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்யும் போது பலரும் சீரியல்கள் பார்க்கும் ஆண்கள் மற்றும் பெண்களை நாம் பார்க்கமுடிகிறது. மக்கள் மனதில் இந்த அளவிற்கு இடம் பிடித்துள்ள சீரியல்களில் உள்ள கதாபாத்திரங்களுக்கு இந்த வார குடும்ப ராசிபலன் என்ன சொல்கிறது என்பதை கொஞ்சம் ஜாலியாக பார்க்கலாம் வாங்க. இதை ,அந்த சீரியல்களை ஒளிபரப்பும் சேனலே வெளியிட்டு கலகலப்பாக்கியிருக்கிறது. வாங்க அதை பார்க்கலாம்... 

ரோஜா
Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!

சன் டீவியில் இரவு ஒன்பது மணிக்கு ரோஜா சீரியல் ஒளிபரப்பப்படுகிறது. இதில் கதாநாயகியாக உள்ள ரோஜா தொடர்ந்து தொலைந்து போவதும், அவரை அர்ஜுன் கண்டு பிடிப்பதுமாகவேக சீரியல் செல்கிறது. இந்த திருடன் போலீஸ் விளையாட்டில் அர்ஜூன் வெற்றி பெறுவதுதான் முடிவு எனத் தெரிந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஆவல் குறையவில்லை. இந்த வாரமும் ரோஜா காணாமல் போய்விட்டார், அர்ஜுன் கண்டுபிடிப்பு பணிகளை தொடங்கிவிட்டார். குடும்ப ராசிபலனில் இவருக்கு இந்த வாரம், ‘ ராமன் தேடுகிற சீதை நீ, அர்ஜுன் சார் ஆன் த வே’ என சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த முறையாவது கண்டம் விட்டு கண்டம் காணமல் போக கேட்டுக் கொள்வோம். உள்ளூர் லொக்கேஷன்ஸ் ஒரே சலிப்பாக இருக்கிறது. 

எதிர் நீச்சல்
Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!
 
சினிமாவில் ஏற்கனவே இரண்டு எதிர் நீச்சல்களைப் பார்த்திருந்தாலும், இந்த பெண்ணின் எதிர் நீச்சலும் தனக்கான மரியாதைக்காகவும், தன் கணவனுக்கான மரியாதைகாகவுமாக இருக்கிறது. தனது கணவனின் அண்ணனின் மண்டையில் மாவிளக்கு வைத்தால் தான் தனக்கு நிம்மதியான தூக்கம் என்ற கொள்கையினை கொண்டு எதிர் நீச்சல் போடும் இவருக்கு, இந்த வார ராசிபலனில், ’கொல காண்டுல இருக்கும் நீ, பலி வாங்காம விடமாட்ட’ என சொல்லப்பட்டிருக்கிறது. ரசிகர்களும் கொல காண்டுல இருக்கிறார்கள், சீக்கிரமே பலி வாங்குமா, கொஞ்சம் நிம்மதியாவாச்சும் இருக்கும். 

சுந்தரி 

Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!

நீங்கள் சீக்கிரமே கலெக்டர் ஆகனும்னு நாங்க எல்லா வேண்டீட்டு இருக்க, ராசிபலனில் உங்களுக்கு கட்டம் சரி இல்லைனு வந்துருக்குமா. அதாவது, ‘சாது மிரண்டா காடு கொல்லாது’ என குடும்ப ராசிபலனில் சொல்லப்பட்டிருக்கு. ஒருமுறை சாது மிரண்டா பராவாயில்லை, சீரியலில் பேக் க்ரவுண்ட் மீயூசிக் தெறிக்கும் போது எல்லாம் சாது மிரண்டா எப்படிமா? இப்போதைக்கு அக்னி பகவானை வேண்டிக்கமா.  

திருமகள் 

Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!

பேரு தான் திருமகள் மத்தபடி உங்க வாழ்க்கையில ஒன்னும் சிறப்பா இல்லையே. உங்க நிலமைய நெனச்சாதான் பயமா இருக்குமா, வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும், அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி? இத நாங்க சொல்லல, நம்ம குடும்ப ராசிபலன்ல சொல்லி இருக்காங்க. பிரச்சனைனு தெருஞ்சும் கூட வெச்சுட்டு சுத்தறதே நாங்க எப்படிமா சொல்றது.  கொஞ்சமாச்சும் உசாரா இருமா... இவங்ககிட்ட அடி வாங்கி அடி வாங்கியே வாழ்க்கை போயிடுமோனு தோனுது... 

தாலாட்டு 

Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல! 

நம்ம குடும்ப ராசிபலன்ல உங்களுக்கு மட்டும் தான் கொஞ்சம் பாசிடிவா வந்துருக்கு. பேருக்கு ஏத்த மாதிரி இந்த வாரம் பிரமாதமா போகும்னு ஜோசியர் சொல்லி இருக்காரு. ’உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு நல்லதா தான் நடக்கும்’னு சொல்லி இருக்காரு. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்கனும். டைரக்டர் உங்க சந்தோசத்த பாத்து கொஞ்சம் பொறாம பட்டாலும் சோலி முடுஞ்சுது. அதனால ஜாலியாவும் கொஞ்சம் கவனமாவும் இருமா. இந்த வாரம் கட்டம் சரியா இருக்கு... அப்போ அடுத்த வாரம் கட்டதுரை வந்தாலும் வரலாம்!

அருவி
Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!

உங்க ஜாதகத்த பாத்து ஜோசியரே பயந்துட்டாருனா பாத்துக்காங்களே... குடும்பத்த ஸ்மூத்தா கொண்டுபோக நீங்க படாதா பாடு படுறீங்களாம். ஆனா, எங்களுக்குதான தெரியும் வண்டிய நீங்க ஒரு பக்கம் திருப்புனா அது ஒரு பக்கம் போகுதுனு. ’நாத்தனார்னா அப்படிதான் இருப்பாங்க, நீங்கதான் நாசூக்க டீல் பண்ணனும்’னு ஜோசியர் சொல்லச் சொன்னாருமா. மத்தபடி எல்லாம் ஓ.கே. 

இந்த வார குடும்ப ராசிபலன்ல சொல்லப்ப்பட்டது இதுதான். அடுத்த வாரம் கட்டங்கள் என்ன சொல்லுதுனு பொருத்து இருந்து பாக்கலாம். என்ன அநியாயம் பண்றாங்க பாருங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget