மேலும் அறிய
Advertisement
250 கிலோ தங்க ஆடை.. அமெரிக்கா பேஷன் ஷோவில் இந்திய பெண்ணுக்கு சிவப்பு கம்பளம்!
மெட் காலா 2021 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தொழிலதிபர் மனைவி சென்று சிவப்பு கம்பளத்தில் நடந்து அசத்தி இருக்கிறார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் எக்கப்பட்ட ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில் ஒன்று தான் மெட் காலா (met gala). இந்த ஏகப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து விதவிதமான உடை அணிந்து கெத்து காட்டுவார்கள்.
இந்த நிகழ்ச்சி கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் சென்றது விட்டது. ஓராண்டிற்கு பிறகு இந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், நிகழ்ச்சி மீதான ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும், கொடுக்கப்பட்ட தீமிற்கு ஏற்றவாறு நட்சத்திரங்கள் ஆடைகள் அணிந்து அணிவகுப்பை நடத்துவார்கள்.
சர்வதேச அளவில் நடைபெறும் இதில் வித்தியாசமான உடைகள் அணிந்து கொண்டு உலகளவில் பிரபலமான மாடல்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
View this post on Instagram
அந்தவகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் மேகா கிருஷ்ணா ரெட்டியின் மனைவி சுதா ரெட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேஷன் நிகழ்ச்சியில் சிவப்பு கம்பளத்தில் அறிமுகமான முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்,
தங்கம், சிவப்பு மற்றும் கடல் நீல நிறத்தில் உள்ள பெரிய ஆடை அணிந்து வந்தார்.அதன் எடையே சுமார் 250 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஆடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஃபரா கான்
வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அடை வடிவமைப்பாளர் ஃபரா கான் கூறுகையில், "அமெரிக்காவின் 50 புகழ்பெற்ற சுதந்திர மாநிலங்களைக் குறிக்கும் அமெரிக்கக் கொடிகளில் உள்ள நட்சத்திரங்களிலிருந்து வைரம் பொறிக்கப்பட்டு வடிவமைத்தேன். இது ரூ.18 கோடி தங்கத்தில் 35 கேரட் விவிஎஸ் வைரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக கிம் கர்தாஷியன் என்பவர் தலை முதல் கால் வரை கருப்பு உடை அணிந்து சென்றிருந்தார். மேலும் முகத்தை கூட கருப்பு மாஸ்க் போட்டு முழுவதுமாக மறைத்திருந்தார்.
முன்னதாக பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மற்றும் இஷா அம்பானி போன்ற பல இந்திய பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இருப்பினும், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்துவந்த ஒரே பெண் என்ற சாதனையை சுதா ரெட்டி படைத்து இருக்கிறார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion