மேலும் அறிய

Rajinikanth: பாட்டை மாற்ற சொன்ன ரஜினி.. பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜா செய்த சம்பவம்!

1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார்.

வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இது 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அல்லரி மொகுடு என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க மறுத்து விட்டார். ரஜினியை வைத்து அண்ணாமலை படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இப்படி ஒரு காமெடி படத்தை எடுக்க முடியாது என சொன்னார். ஆனால் ரஜினிகாந்த் வித்தியாசமான படம் கொடுக்க வேண்டுமென சொன்னதால் பின்னர் இயக்கினார். 

இந்த படத்தில் கொஞ்சி கொஞ்சி, மலைக்கோவில் வாசலிலே, வாடி வெத்தலை, மாடத்திலே கன்னி மாடத்திலே என அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்த படத்தில் மலைக்கோவில் வாசலிலே, கொஞ்சி கொஞ்சி பாடல் உருவான விதத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். 

அதில், “கொஞ்சி கொஞ்சி பாடலும், மலைக்கோவில் வாசல் பாடலுக்கு முன்னாடி வேறொரு வரிகளை வைத்து பாடல் எழுதியிருந்தோம். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாடி, இந்த 2 பாடல்களும் ரஜினிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.

என்ன காரணம் எனவும் தெரியவில்லை. தெலுங்கில் கொஞ்சி கொஞ்சி பாடல் வேறு மாதிரி இயக்கப்பட்டிருக்கும். அது ரஜினியின் மனதில் பதிந்து விட்டது. அதனால் தமிழில் சரியாக வரவில்லை என ரஜினி என் அப்பாவிடம் சொன்னார். அவர் நீ நடி ரஜினி, செட்டாகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி விட்டார். பின்னர் 2 பாடலில் ஒரு பாடலை ரஜினிக்காக மாற்றி விடலாம். அதேசமயம் கொஞ்சி கொஞ்சி பாடல் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என கறாராக சொல்லி விட்டார்.

இளையராஜாவிடம் சென்று ரஜினி இப்படி பாடல் வேண்டாம் என சொல்கிறார், மாற்றிவிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர் ஏன் இந்த பாடல் நல்லா தானே இருக்கிறது? என கேட்கிறார். நல்ல ஹெவியான ரிதம் இருக்க வேண்டும் என நினைக்கிறார் என சொன்னதும், அவ்வளவு தானே இந்த பாடலை கேளு என சொல்லிவிட்டு “மலைக்கோவில் வாசலில்” பாடலை உருவாக்கினார். நீங்கள் அந்த பாடலை நன்றாக கேட்டால் டிரம்ஸ் இசை  மாதிரி பீட் இருக்கும்” என சுப்பு பஞ்சு கூறியிருப்பார். 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget