மேலும் அறிய

Star Movie Trailer: நம்பிக்கை நட்சத்திரமாக கவின்.. பக்கபலமாக யுவன் இசை.. ஸ்டார் பட ட்ரெய்லர் வெளியீடு!

Star Movie - Kavin: டாடா படத்துக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியாக உள்ள ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்து வருகிறது.

Star Movie Trailer: பியார் பிரேம காதல் திரைப்படத்தை இயக்கி கவனமீர்த்த இளன் இயக்கத்தில், கவின் நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து இன்று நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் கவின் இந்தப் படத்தின் ட்ரெய்லரிலும் அதே போன்ற கதாபாத்திரத்தில் இடம்பெற்று கவனமீர்த்துள்ளார்.

கவனமீர்க்கும் ட்ரெய்லர்!

சிறுவயது முதலே நடிப்பு கனவுடன் வலம் வரும் நாயகனாக கவின், அவரைப் பார்த்து பார்த்து செதுக்கும் அப்பாவாக லால், காதல், நடிப்பு பயிற்சி, வாழ்க்கைப் போராட்டம் என அனைத்து உணர்ச்சிகளும் இடம்பெற்றுள்ள இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் கவனமீர்த்துள்ளது.

யுவனின் இசையும் இந்த ட்ரெய்லரில் சிறப்பாக பொருந்திப் போயுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இணையத்தில் இதயங்களைப் பறக்க விட்டு வருகின்றனர்.

வரவேற்பைப் பெற்ற பாடல்கள்

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில், நாயகிகளாக அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரும், கீதா கைலாசம் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக ஸ்டார் படத்தில் இருந்து விண்டேஜ் லவ், மெலடி ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்னதாக இப்படத்தின் மேக்கிங் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி கவனமீர்த்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரின் அப்பாவைப் பற்றிய கதை

நடிகராக வேண்டும் எனும் தன் தந்தையின் கனவை மனதில் வைத்து தான் ஸ்டார் படத்தினை எடுத்துள்ளதாக முன்னதாக இயக்குநர் இளன் தெரிவித்திருந்தார். அட்லீயின் ‘ராஜா ராணி' படத்தில் நடிகர் ஜெய்யின் தந்தையாக நடித்தவர் தான் இளனின் தந்தை பாண்டியன். பெரிய நடிகராக வேண்டும் என்ற இவரது கனவு கைகூடாத நிலையில், தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், புகைப்படக்காரர் என வலம் வந்துள்ளார். இந்நிலையில், தன் அப்பா கொடுத்த நம்பிக்கையால் தான், தான் இயக்குநராக உருவெடுத்துள்ளதாகவும் , தன் அப்பாவை மையப்படுத்தி இப்படத்தின் கதையை உருவாக்கியதாகவும் முன்னதாக இளன் தெரிவித்திருந்தார். 

சீரியல், பிக்பாஸ், வெள்ளித்திரை என படிப்படியாகப் பயணித்து இன்று நம்பிக்கையுடன் கோலிவுட்டில் பயணித்து வரும் நடிகர் கவினின் ரியல் லைஃப் சம்பவங்களும் இக்கதையை ஒத்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் படிக்க: Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

Serial Actress Julie: 10 வருடம் காத்திருந்து 42 வயதில் குழந்தைக்கு தாயாகப்போகும் நடிகை ஜூலி: அழகிய தருணம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

America Iran War.?: போராட்டத்தில் 5,000 பேர் பலி.? ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா; விரையும் போர்க்கப்பல்கள்; பதற்றம்
போராட்டத்தில் 5,000 பேர் பலி.? ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா; விரையும் போர்க்கப்பல்கள்; பதற்றம்
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
ABP Premium

வீடியோ

”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Iran War.?: போராட்டத்தில் 5,000 பேர் பலி.? ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா; விரையும் போர்க்கப்பல்கள்; பதற்றம்
போராட்டத்தில் 5,000 பேர் பலி.? ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா; விரையும் போர்க்கப்பல்கள்; பதற்றம்
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
EPS Speech: ’’பிரதமர் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: தீயசக்தி திமுகவை விரட்டுவோம்’’- ஈபிஎஸ் சூளுரை!!
EPS Speech: ’’பிரதமர் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: தீயசக்தி திமுகவை விரட்டுவோம்’’- ஈபிஎஸ் சூளுரை!!
TN 12th Hall Ticket: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு? அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
TN 12th Hall Ticket: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு? அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் ரீல் கேரக்டருக்கும், ரியல் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை - நடிகர் மோகன் வேதனை
Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் ரீல் கேரக்டருக்கும், ரியல் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை - நடிகர் மோகன் வேதனை
TTV Dhinakaran:
TTV Dhinakaran: "சண்டை இருந்தது உண்மை.." இபிஎஸ்-ஐ முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம் - மோடிக்கு தினகரன் உத்தரவாதம்
Embed widget