Sridevi: மகள்களுக்காக சினிமாவை விட்டு விலக நினைத்த ஸ்ரீதேவி...ஆனால்...மகள் ஜான்வி உருக்கமான தகவல்
எனது அம்மா ஸ்ரீதேவி சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவரை காணாமல் நாங்கள் இருவரும் பலமுறை அழுவோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த போது சினிமாவை விட்டு விலக நினைப்பதாக தனது அம்மா மறைந்த நடிகை ஸ்ரீதேவி கூறியதாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பல மொழி ரசிகர்களிடம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் மிலி படம் வெளியாகவுள்ளது. சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர் இணைந்துள்ள இப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ளார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் அவர் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றியும், சகோதரி குஷி கபூர் பற்றியும் சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் இப்போதெல்லாம் நான் குஷியிடம் என் அம்மாவின் எண்ணங்களை உணர்கிறேன். நாட்கள் செல்லச் செல்ல என் அம்மா சொல்வதைப் போலவே அவளும் சொல்கிறாள். ஆனால் என்னால் குஷிக்கு போதுமான அளவு எதுவும் செய்யவில்லை. அவளின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு நான் அங்கு இருந்தேன்.
View this post on Instagram
குஷிக்கு ஆதரவாக நடிப்பதை விட்டுவிடலாம் என நினைத்துள்ளேன். மேலும் எனது அம்மா ஸ்ரீதேவி சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவரை காணாமல் நாங்கள் இருவரும் பலமுறை அழுவோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படப்பிடிப்பின் போது குஷியின் பிறந்தநாளை அம்மா தவறவிட்டு விட்டார். இதன்பின்னர் எங்கள் இருவரையும் அழைத்து எனக்கு மீண்டும் நடிக்க விருப்பமில்லை. உங்களுடன் இருக்க விரும்புகிறேன் என வருத்தப்பட்டார்.
அப்போது அவரின் உணர்வு எங்களுக்கு புரியவில்லை. பதிலுக்கு நானும் குஷியும் சீக்கிரமே நாம் அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என ஆறுதல் சொன்னோம். ஆனால் இப்போது நான் உண்மை புரிகிறது என ஸ்ரீதேவி பற்றிய நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் இந்திய திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.