Chinmayi: "பாலியல் சீண்டல் தந்த வைரமுத்துவுடன் மேடையை பகிர்வதா?" முதல்வர் உள்பட தலைவர்களுக்கு சின்மயி கேள்வி
பாலியல் சீண்டல் தந்த வைரமுத்துவுடன் அதிகாரத்தில் இருப்பவர்கள் மேடையை பகிர்ந்து கொள்வதா? என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
Chinmayi: பாலியல் சீண்டல் தந்த வைரமுத்துவுடன் அதிகாரத்தில் இருப்பவர்கள் மேடையை பகிர்ந்து கொள்வதா? என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடகி சின்மயி:
பாடகி சின்மயி உட்பட 17-க்கும் மேற்பட்ட பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். குறிப்பாக, பாடகி சின்மயி வைரமுத்து மீது கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். ஆனால், வைரமுத்து மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, சின்மயி தான் சமூக வலைதளங்களில் வைரமுத்து ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். இந்த நிலையில், தற்போது ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிய்ல, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.
பின்னர், வைரமுத்து குறித்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுதிக் தாருங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். வைரமுத்துவுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது. இன்னும் சொல்லப்போனால் கட்டளை. ”கவிப்பேரரசு வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார்” என்று கூறியிருந்தார்.
"பாலியல் தொல்லை தந்த வைரமுத்துவை மேடையில் ஏற்றுவதா?”
Some of the most powerful men in Tamilnadu platforming my molester whilst I got banned - years of my career lost.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 1, 2024
May the entire ecosystem that promotes and supports sex offenders whilst incarcerating honest people who speak up start getting destroyed from this very moment,… https://t.co/J7HcqJYAcV
இந்த நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் விரக்தியில் சில கருத்துகளை பதிவிட்டிருக்கிறார். அதில், ”தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரை மேடையில் ஏற்றுகின்றனர். இவரால் எனது கேரியரை போனது. இதுபோன்று, பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் சூழல் தொடர்ந்தால், நேர்மையாக குரல் எழுப்புவோரும் முடங்கிப் போவார்கள். நான் விரும்பியது நிறைவேறும் வரை, என்னால் பிரார்த்தனை செய்வது தவிர்த்து வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது" என்று பதிவிட்டிருந்தார் சின்மயி.