இரவை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் லிஸ்ட்!
இரவு பொழுதை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் என்னென்ன?
![இரவை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் லிஸ்ட்! some mesmerizing songs of writer pulamaipithan that you can hear in the night இரவை அழகாக்கும் புலவர் புலமைபித்தனின் பாடல்கள் லிஸ்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/bcdb28340c5dd84c137ffe9eaaac8ad1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளவர் புலவர் புலமைபித்தன். இவர் 1968ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழில் முதன் முதலில் எழுதிய பாடல் நான் யார் நீ யார் என்பது தான். அப்போது முதல் கடைசியாக நடிகர் வடிவேலு கதநாயகனாக நடித்த எலி திரைப்படம் வரை பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய வரிகள் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1.ஆயிரம் நிலவே வா:
அடிமை பெண் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளியான இப்பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுஷீலா ஆகியோர் பாடியிருப்பார்கள். இந்தப் பாடலில் புலவர் எழுதிய வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
"நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன..."
2. பச்சைக் கிளிக்கு ஒரு:
நீதிக்கு தலை வணங்கு என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் எம்ஜிஆரின் நடிப்பில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும்.
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே..."
3. பூவிலி வாசலிலே:
தீபம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் ஜானகி ஆகியோரின் குரலில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும்.
"பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே..."
4. தென்பாண்டி சீமையிலே:
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்பத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜா இசையமைத்து இப்பாடலை பாடியிருப்பார். இந்தப் பாடலிலும் புலவரின் வரிகள் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும்.
"தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே .."
5. கல்யாண தேன் நிலா:
மமூட்டி, அமலா நடிப்பில் வெளியான மௌனம் சம்மதம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலுக்கு இளையராஜாவின் இசை மற்றும் புலவரின் வரிகள் கேட்கும் போது இன்பமாக அமைந்திருக்கும். இந்தப் பாடலின் அனைத்து வரிகளும் இறுதியில் லா என்று முடியும் வகையில் சிறப்பாக புலவர் புலமைபித்தன் எழுதியிருப்பார்.
"தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா பார்ப்போமே
ஆவலா வா வா
நிலா…"
இவ்வாறு பல பாடல்களை புலவர் புலமைபித்தன் எழுதியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)