மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  Poll of Polls)

RAMANY Vs RAMANY 3.0: என்ன எங்கள ஞாபகமிருக்கா.. மீண்டும் வருகிறது சின்னத்திரையை கலக்கிய ரமணி Vs ரமணி.. யார் யார் நடிக்கிரா தெரியுமா?

சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான  “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. 

பல ஆண்டுகளுக்கு பிறகும் பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்திருக்கிறது.

சின்னத்திரையில் மிகச்சிறந்த  பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல்,  இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது. 'குடும்ப டிராமா' என்ற அடிப்படைக் கருவில்  மிகச்சிறப்பான நகைச்சுவை தூவப்பட்டு, அட்டகாசமான வகையில் உருவாக்கப்பட்ட இத்தொடர்,  உலகளாவிய ரசிகர்களின் விருப்பமிகு தொடராக மாறிவிட்டது. இந்த தொடரின்  இரண்டு சீசன்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், இயக்குனர் நாகா மீண்டும் 'ரமணி Vs ராமனி 3.0' என்ற புதிய மூன்றாவது சீசனுடன் வந்துள்ளார்.

RAMANY Vs RAMANY 3.0: என்ன எங்கள ஞாபகமிருக்கா.. மீண்டும் வருகிறது சின்னத்திரையை கலக்கிய ரமணி Vs ரமணி.. யார் யார் நடிக்கிரா தெரியுமா?

இந்தத் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மீண்டும் மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார் மற்றும் வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகளாக ‘ராகினி’யாக பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் ‘ராம்’ வேடத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார். 

இந்த புதிய சீசன் குறித்து இயக்குனர் நாகா கூறியதாவது... 

குடும்ப வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள், கண்ணீர் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. எந்த குடும்பத்திலும் இதுதான்  அமைப்பாக இருக்கும். இந்தப்பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல, இனம், மதம், சாதி அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்தது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பம் சில விஷயங்களில் தனித்துவமானது.

தாத்தா, பாட்டி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் செலுத்தும் வலுவான செல்வாக்கு (குறுக்கீடு, சரியான நேரங்களில்) பாதிப்புகள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

RAMANY Vs RAMANY 3.0: என்ன எங்கள ஞாபகமிருக்கா.. மீண்டும் வருகிறது சின்னத்திரையை கலக்கிய ரமணி Vs ரமணி.. யார் யார் நடிக்கிரா தெரியுமா?

அதனால் இன்றும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில் தான்  வசித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீனேஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற அதன் சொந்த பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றை இந்த தொடர் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் தரும். 

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான புஷ்பா கந்தசாமி கூறும்போது…

ஒரு தயாரிப்பாளராக, எங்களின் ஆல் டைம் ஹிட் தொடரான ‘ரமணி Vs ரமணி’யின் புதிய சீசனை உருவாக்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்லைன் தளங்களில் இந்த தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, இந்த புதிய மூன்றாவது சீசனை உருவாக்க காரணமாக அமைந்தது.

ஒரு வருடத்திற்கும் மேலாக அமர்ந்து , எங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்த அட்டகாச தருணங்களை இத்தொடரின்  கருப்பொருளாக உருவாக்கியுள்ளோம். இன்றைய குடும்பங்களில் தினசரி நடக்கும் பொதுவான அம்சங்களின் அடிப்படையில், இந்தப் புதிய சீசனை உருவாக்கியுள்ளோம், இது ரசிகர்களின் வாழ்வை பிரதிபலிப்பதோடு,  பார்வையாளர்களை சத்தமாக சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும். 

ராமனி Vs ரமணி 3.0 தொடரை இயக்குநர் நாகா இயக்குகிறார். முதல் இரண்டு பாகங்களை தயாரித்த கவிதாலயா புரடக்சன்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி பிரிவான மின்பிம்பங்கள் இந்த புதிய மூன்றாவது சீசனையும்  தயாரித்துள்ளது. கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரெஹான் இசையமைக்கிறார், சிவா யாதவ் கலை இயக்கம் செய்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை
Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!
அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hosur Lawyer Murder | நடுரோட்டில் பயங்கரம்!ஓசூர் வழக்கறிஞர் படுகொலை! விரட்டி விரட்டி வெட்டிய வாலிபன்AR Rahman Divorce |‘’நானும் கணவரை பிரிகிறேன்!’’AR ரஹ்மான் GUITARIST பகீர்Police Press meet Speech About Tanjore Teacher Murder | ‘’CLASSROOM-ல கொலை நடக்கல!’’  தஞ்சை ஆசிரியர் படுகொலை  டிஐஜி பகீர் REPORTNamakkal DMK Fight | ’’டேய்..நீ யார்ரா‘’ திமுக நிர்வாகிகள் கடும் மோதல் சமாதானப்படுத்திய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை
Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!
அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!
PM Modi; பூமியைத் தாயாகவும், மரங்களை கடவுளாகவும் , ஆறுகளை உயிராகவும் கொண்டுள்ளோம் - பிரதமர் மோடி.!
PM Modi; பூமியைத் தாயாகவும், மரங்களை கடவுளாகவும் , ஆறுகளை உயிராகவும் கொண்டுள்ளோம் - பிரதமர் மோடி.!
வாக்களிக்க காத்திருந்த சுயேட்சை வேட்பாளர் மாரடைப்பால் மரணம்! மகாராஷ்டிரா தேர்தலில் அரங்கேறிய சோகம்! 
வாக்களிக்க காத்திருந்த சுயேட்சை வேட்பாளர் மாரடைப்பால் மரணம்! மகாராஷ்டிரா தேர்தலில் அரங்கேறிய சோகம்! 
Breaking News LIVE 21 Nov 2024: ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை! 5 நாட்களுக்கு தொடரப்போகும் மழை!
Breaking News LIVE 21 Nov 2024: ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை! 5 நாட்களுக்கு தொடரப்போகும் மழை!
Allu Arjun Networth: அம்மாடி!!  சிரஞ்சீவிக்கே டப் கொடுப்பார் போலயே - சொத்து மதிப்பில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!
Allu Arjun Networth: அம்மாடி!! சிரஞ்சீவிக்கே டப் கொடுப்பார் போலயே - சொத்து மதிப்பில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!
Embed widget