மேலும் அறிய
Advertisement
Actor Vijay Attacked: விஜய் மீது காலணி வீசிய நபர் குறித்து போலீசில் புகார்
Actor Vijay Attacked: விஜய் மீது காலணி வீசிய வீடியோ இணையத்திலும் வேகமாக பரவியது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
Actor Vijay Attacked: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர் என பலரும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்த ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கடந்த 28ம் தேதி இரவு 10 மணிக்கு மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பேழை மீது கை வைத்து அஞ்சலி செலுத்திய விஜய் சில நிமிடங்கள் விஜயகாந்த் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கும், அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறிய விஜய், தனது காரில் புறப்பட தயாரானர்.
அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் விஜயகாந்தை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்ற காவலர்கள் முயன்றனர். அப்போது எங்கிருந்தோ ஒருவர் வீசிய காலணி ஒன்று விஜய்யின் முதுகு பகுதியில் விழுந்தது. விஜய் மீது காலணி வீசிய வீடியோ இணையத்திலும் வேகமாக பரவியது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
Wait what? 😲 somebody throws slipper on #Vijay #Vijayakanth#CaptainVijayakanth#RIPCaptainVijayakanthpic.twitter.com/d8RAGnAcDs
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) December 28, 2023
இந்த நிலையில் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், விஜய் மீது புகார் காலணி வீசிய நபரை கண்டுப்பிடித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விஜய் மீது செருப்பு வீசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Three Of Us Review: சில விஷயங்கள் மறக்கலாம்.. ஆனாலும் அது உயிரில் தங்கும்.. Three Of Us படத்தின் விமர்சனம் இதோ..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion