Actor S.J.Suryah: 'எனக்கு இந்த இயக்குநரை இயக்க வேண்டும் என ஆசை’ : யாரை சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா?
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஒருவரை நடிகராக இயக்க வேண்டும் என்கிற ஆசையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஒருவரை நடிகராக இயக்க வேண்டும் என்கிற ஆசையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குநராகவும், நடிகராகவும் தனி இடம்
தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் இயக்குநராகவும், நடிகராகவும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனி இடமுண்டு. வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், குஷி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றார். தொடர்ந்து நியூ படத்தின் மூலம் நடிகராகவும் எண்ட்ரீ கொடுத்தார். அதன்பின்னர் அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன், கள்வனின் காதலி, நியூட்டனின் மூன்றாம் விதி என சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதன்பின்னர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தின் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இம்முறை ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், கதையின் முக்கிய கேரக்டர் என தேடி தேடி நடிக்கத் தொடங்கினார். இறைவி, ஸ்பைடர், மெர்சல், மாநாடு,டான் உள்ளிட்ட படங்களில் எதிர்மறையான கேரக்டர்களிலும், இசை, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களிலும் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அடுத்ததாக ஜூன் 16 ஆம் தேதி எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பொம்மை படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களும் அவரின் கைவசம் உள்ளது.
ஷங்கரை இயக்க ஆசை
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரை நடிகராக கொண்டு படம் ஒன்றை இயக்க வேண்டும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். ஷங்கர் நடிகராக ஆசைப்பட்டு தான் சினிமாவுக்கு வந்தார். ஆனால் இப்போது அவர் இந்தியா முழுவதும் தெரிந்த வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநராக் உள்ளார். நான் அவர் இயக்கத்தின் நண்பன் படத்தின் சின்னதாக கேரக்டர் பண்ணினேன். அப்போது ஒரு சீனை அவர் தான் நடிச்சு காட்டுவார்.
இப்போ அவர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் நான் நடித்து வருகிறேன். அதனால் இன்னும் அவருடன் அதிக நேரம் பயணிக்கிறேன். ஷங்கர் எப்படி ஒரு சீனை நடிச்சு காட்டுவார் என்பதை பார்க்கவே ஆவலாக இருக்கும். அதை வச்சுத்தான் சொல்றேன். நான் ஷங்கரை வைத்து படம் எடுக்க வேண்டும். அதுக்கேற்ற மாதிரி நல்ல கதை கிடைக்கணும். அவர் ஒரு ஸ்டார் இயக்குநர் என்பதால் அந்த வேல்யூ குறையாமல் இருக்கிற கதையாக அது இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை கிடைத்தால் அது நன்றாக இருக்கும் என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.