SK 25 : ஆல்ரெடி 4 பாட்டு போட்டாச்சு...பராசக்தி படம் பற்றி ஜிவி பிரகாஷ்
சுதா கொங்காரா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஏற்கனவே 4 பாடல்களுக்கு இசையமைத்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பராசக்தி
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதர்வா , ஶ்ரீலீலா , ரவி மோகன் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பராசக்தி டீசர் ரிவியூ
சூர்யாவை நாயகனாக வைத்து சுதா கொங்காரா இயக்கவிருந்த படம் புற்நாநூறு. இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இப்படம் உருவாக இருந்தது. நஸ்ரியா , துல்கர் சல்மான் என பெருக் நட்சத்திரங்கள் படத்தில் நடிக்க இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சூர்யா விலக அடுத்தடுத்து மற்ற நடிகர்களும் விலகினர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைந்தார்.
தற்போது இதே கதையில் சுதா கொங்காரா சில மாற்றங்களை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பச்சையப்பன் கல்லூரியை கதைக்களமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மாணவர்களை ஒன்றுதிரட்டி போராட்டத்திற்கு தயார் படுத்தும் சிவகார்த்திகேயன் அவரை கொல்ல வேண்டும் என வில்லனாக வரும் ரவி மோகன் என இந்த டைட்டில் டீசர் பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.
பராசக்தி படம் குறித்து ஜி.வி பிரகாஷ்
நடிகர்கள் தவிர்த்து இப்படத்திற்கு மற்றொரு மிகப்பெரிய பலமாக இருக்கப் போகிறவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி இசையமைத்தார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு ஜி.வி இசையமைத்த பாடல்கள் பெரியளவில் ஹிட் அடித்தன. தற்போது இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் ஜி.வி கூட்டணி பராசக்தி படத்தில் இணைய இருக்கிறது.
இப்படம் குறித்து ஜிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில். " பராசக்தி படத்திற்கு ஏற்கனவே 4 பாடல்களுக்கு இசையமைத்துவிட்டேன். சுதா கொங்காராவுக்கு மிகவும் தனித்துவனாம் இசை ரசனை இருக்கிறது. இந்த நான்கு பாடல்களும் சூப்பராக வந்திருக்கின்றன. நிச்சயமாக இதில் மூன்று பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்' என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

