Amaran Trailer : யாருக்காவது இந்த டவுட் வந்ததா ? அமரன் பட டிரைலர் ரிவியு...
Amaran Trailer : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலரின் சின்ன ரிவியுவை பார்க்கலாம்
அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறதுசிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவான பட என்று அமரன் படத்தை சொல்லலாம். மொத்தம் 120 கோடி ரூபாயில் இப்படம் உருவாகியுள்ளது.
அமரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
The face of #Amaran #MajorMukundVaradarajan#AmaranTrailer
— Raaj Kamal Films International (@RKFI) October 23, 2024
Tamil: https://t.co/OBIgEkeZyi
Hindi: https://t.co/ZnoRNHaSHD
Telugu: https://t.co/2TOD9Uz5dt
Malayalam: https://t.co/qvp0RF9Clj
Kannada: https://t.co/WOGedy6kBA#AmaranDiwali #AmaranOctober31 #Ulaganayagan… pic.twitter.com/rCqjXh5Ld8
அமரன் டிரைலர் ரிவியு
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது அமரன் படம். உண்மை கதையை அதிலும் இந்த மாதிரியான ஒரு கதையை எடுத்து கையாளப்படும் போது இயல்பாகவே சினிமாவிற்கு தகுந்த வகையில் அதில் சில மாற்றங்கள் செய்யப்படும். அமரன் படத்தைப் பொறுத்தவரை படத்தின் கதையை முடிந்த அளவிற்கு உண்மைக்கு நெருக்கமாக வைத்திருக்க முயற்சித்திருப்பது படத்தின் டிரைலரில் இருக்கும் காட்சிகளை வைத்து சொல்லலாம். மேஜர் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவுக்கு இடையிலான காட்சிகளாக இருந்தாலும் சரி ராணுவ சண்டைக்காட்சிகளாக இருந்தாலும் சரி மிகையில்லாமல் உணர்வுகளை மையப்படுத்திய காட்சிகளை இப்படத்தில் எதிர்பார்க்கலாம். பின்னணி இசையைப் பொறுத்தவரை ஜிவி சத்தமாக இல்லாமல் படத்தின் டிராமாவுக்கு ஏற்ற வகையில் இசையமைத்திருக்கிறார்.
உண்மை கதை என்பதால் இந்த படத்தில் நாயகனின் முடிவு என்னவென்பது எல்லாவற்றுக்கும் தெரியும். உண்மை கதைகள் படமாகும்போது அதில் நாம் இப்படி நடந்திருக்க கூடாதா என எதிர்பார்ப்பதையும் நம் படத்தில் வைப்பதற்கான சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அந்த வகையில் படத்தின் க்ளைமேக்ஸும் அதே உண்மை சம்பத்தைப் போல் இருக்குமா இல்லை ரசிகர்களுக்காக ஏதாவது மாற்றம் செய்யப்பட்டிருக்குமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும்.