மேலும் அறிய

Sivakarthikeyan vs Arun Vijay: மகனின் பிறந்தநாளில் முடிந்த வாய்க்கால் தகராறு... வாழ்த்திய SK... வணங்கிய அருண் விஜய்!

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய், "பாண்டவர் பூமி" படத்தில்தான் வெளியே தெரிய தொடங்கினார். 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நீண்ட காலமாக போராடி வருபவர் அருண் விஜய். தனது தனிப்பட்ட உடல் உழைப்பாலும், வீரியமிக்க நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தாலும் ஒரு நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஜொலிக்கவில்லை. கடந்த 1995 ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய், "பாண்டவர் பூமி" படத்தில்தான் வெளியே தெரிய தொடங்கினார். 

தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" படம் தான் அருண் விஜய்க்கு திரை வாழ்க்கையில் இரண்டாம் கட்ட திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு இவர் நடித்த குற்றம் 23, தடம் போன்ற படங்கள் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும்படியாக இருந்தது. 

இந்தநிலையில் அருண் விஜய் ஒரு புறம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து வர, மறுபுறம் சிவகார்த்திகேயனுக்கு ஏறுமுகமாகவே இருந்தது. சிவா தொட்டத்தெல்லாம் ஜெயமாக தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.  இப்படியாக செல்ல கடந்த 2018 ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா திரைப்படம் வெளியானது. அப்பொழுது அந்த படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. 

Sivakarthikeyan vs Arun Vijay: மகனின் பிறந்தநாளில் முடிந்த வாய்க்கால் தகராறு... வாழ்த்திய SK... வணங்கிய அருண் விஜய்!

அந்தநேரத்தில், நடிகர் அருண் விஜய் போட்ட ட்வீட் மிகவும் சர்ச்சை ஆனது. அதில், "யார் எல்லாம் மாஸ் பண்றதுனு வெவஸ்த இல்லாம போச்சு, தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும் உண்மையான திறமை" என பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பதிவானது சிவகார்த்திகேயனுக்கு எதிராகதான் அருண் விஜய் போட்டார் என்று ஊடங்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவினர்.  இதையடுத்து அருண் விஜய், என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "மிஸ்டர் லோக்கல்" படத்தில் அருண் விஜய்யை கலாய்க்கும் விதமாக அவர் ட்வீட் செய்த பதிவை வசனங்களாக வைத்திருந்தனர். மேலும், மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் சிவகார்த்திகேயன் அதிக முக்கியத்துவம் கொடுத்து அருண் விஜய் ஓரங்கட்டப்பட்டதாகவும், இதனால் அருண் விஜய் மேலும் கோவம் அடைந்ததாகவும் தகவல் பரவியது. 

இந்தநிலையில், அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று என் மகன் அர்னவ் பிறந்தநாள் அனைவரும் வாழ்த்துங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரீ - ட்வீட் செய்த நடிகர் சிவகார்த்திகேயன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி. ஓ மை டாக்கில் உங்கள் நடிப்பை ரசித்தேன்.. தொடருங்கள், உங்கள் படிப்பு மற்றும் நடிப்பு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டார். 

தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிரதர்! அர்னவ் வாழ்த்துவதற்கு நீங்கள் உண்மையிலேயே அன்பானவர்.. உங்கள் வாழ்த்துகளை நிச்சயமாக அவருக்கு தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

இந்த ட்வீட்க்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இருந்த வாய்க்கால் தகராறு முற்றுப்புள்ளி பெற்றது எனவும், என்ன இருந்தாலும் பெரிய பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்யா என்று இருவரையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget