Sita Ramam Collection: தியேட்டரில் சக்கை போடு போடும் சீதாராமம்.. ஒரிஜினல் வசூல் இதுதான்.. குஷியில் துல்கர்!
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம் ‛சீதாராமம்’. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5) திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான அன்றைய தினம் சென்னையில் சீதாராமம் திரைப்படம் 7 லட்சம் ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்ட நிலையில், உலக அளவில் 3 நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் இந்தத்திரைப்படம் தற்போது 50 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
கதையின் கரு:
காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார்.
View this post on Instagram
ஒருக்கட்டத்தில் இருவரும் சந்தித்து காதல் வளர்த்து வர, திடீரென்று வரும் போர் பணிக்காக கிளம்புகிறார் துல்கர் சல்மான். இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினாரா..? அவரின் காதல் என்னவானது..? அங்கு அவரது காதலிக்காக எழுதிய கடிதத்தின் நிலை என்ன ? அதற்கும் அஃப்ரீனாவிற்கும் (ராஷ்மிகா) என்ன தொடர்பு..? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சீதா ராமம் படத்தின் கதை.
முழு விமர்சனத்தை படிக்க: Sita Ramam Review: காதல் கோட்டையா... காதலுக்கு மரியாதையா... காதலில் உருக வைத்ததா சீதா ராமம்?
திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதனுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் இடையே நடந்த விவாதம்:
சென்னையில் சீதா ராமம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துல்கரிடம், “படத்தில் உங்க பேரு ராம் சொன்னீங்க.. பட தலைப்பில் இருக்கு.. ராமம்னா என்ன..? என்று கேட்டார்.. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “ அவங்க ஒரு கதையை பற்றி சொல்லும்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா- ராமம் என்று வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்..
அதனைத்தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இல்லைங்க..எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. அது சீதாராமம் மா.. இல்லை சீதா நாமமா.. சீதா ராமனா.. எனக்கு ராமம்க்கு அர்த்தம் தெரிஞ்சாவணும் என்று கேட்டார்..
அதற்கு பதிலளித்த துல்கர், “ நான் அதை எழுதல. அதை பற்றி சொல்றதுக்கு என்னோட இயக்குநர் இங்க இருந்திருக்கணும். ஆனால் அவரும் இங்கு இல்ல.சூழ்நிலை இப்படி இருக்க நான் என்ன பண்ண முடியும்..” என்றார்.
தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன்.. அப்படினா அது என்னன்னு தெரியாமலேயே நடிச்சீட்டீங்களா என்று கேட்க.. நான் இந்தப்படத்தில் கமிட் ஆகும் போகும் போது படத்திற்கு பேரு வைக்கல.. ஒரு மாதத்திற்கு முன்னாடிதான் பேரு வைத்தார்கள்” என்றார்.