Siragadikka Aasai: முத்துவின் வாழ்க்கையை நாசமாக்கிய மனோஜ் - சீர்திருத்தப் பள்ளிக்கு செல்ல காரணம் - சிறகடிக்க ஆசை உண்மை
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை நெடுந்தொடரில் முத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்ல காரணமே, மனோஜ் தான் என்பது அம்பலமாகியுள்ளது.

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை நெடுந்தொடரில் முத்து சீர்திருத்த பள்ளிக்கு செல்ல யார் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
முத்துவை வெறுக்கும் விஜயா
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், சிறகடிக்க ஆசை சீரியர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் தான், தாய் விஜயா தன்னை இந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்க காரணம் என்ன என்பதை, மனைவி மீனாவிடம் முத்து கூறி வருகிறார். அதன்படி, பாட்டியின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட, முத்துவிற்கு அவன் எதிர்பார்த்த பாசம் தாயிடம் இருந்து கிடைக்கவில்லை. 6 வருடங்கள் பிரிந்து இருந்ததும், தாய் மற்றும் மகன் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முத்துவின் நியாயமான கோபத்தை கூட தவறாக புரிந்து கொண்டு, அவனை விஜயா வெறுக்க தொடங்குகிறார்.
மனோஜின் சேட்டைகள்:
மனோஜிற்கு உணவை பரிமாறிய தாய் தனக்கு மட்டும் மரிமாறவில்லை என்ற கோபத்தில், முத்து தட்டை தூக்கி வீச விஜயா அவனுக்கு சூடு வைத்து விடுகிறார். இதனால் மனமுடைந்து தனது பாட்டியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னை அழைத்துச் செல்லும்படி அழுகிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்து முத்துவை விஜயா அடித்து விடுகிறார்.
பக்கத்து வீட்டு சிறுவனன் வீடியோ கேம் பிளேயரை, மனோஜ் பிடுங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விளையாடுகிறான். இதுதொடர்பான புகார் வீட்டிற்கு வந்ததை அறிந்ததும், அந்த பழியை முத்து மீது சுமத்தி விடுகிறான். இதனால் அவன் மீதான வெறுப்பு விஜயாவிற்கு மேலும் அதிகரிக்கிறது. பள்ளி தேர்வில் முத்து ஃபெயில் ஆனதும், பாட்டியின் மோசமான வளர்ப்பே காரணம் என மனோஜ் சீண்டுகிறான். இதனால் கோபமடைந்து அவனை சரமாரியாக தாக்கும் முத்துவை, பள்ளி தலைமையாசிரியர் நாள் முழுவதும் முட்டி போட வைக்கிறார். எனது தம்பி மோசமானவன், முரடன், அனைவரையும் இப்படி தான் அடிப்பான் என மனோஜே பள்ளியில் அனைவர் முன்பும் பேசுகிறான்.
தலைமையாசிரியர் மண்டையை உடைத்த மனோஜ்:
தொடர்ந்து, தன்னை விட நன்கு படித்து முதல் ரேங்க் எடுத்த மாணவனின், நோட்டு புத்தகங்களை எல்லாம் கிழித்து போடும் மனோஜ், இனி தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்தாலும் நீ எழுதக் கூடாது ,மீறினால் அடிப்பேன் என மிரட்டுகிறான். இதனை தட்டி கேட்கும் முத்து, மனோஜை அடித்து முடிந்தால் நேர்மையாக படித்து முதல் மதிப்பெண் எடுக்க முயற்சி செய் என எச்சரிக்கிறான். இதனால் ஆத்திரமடையும் மனோஜ், மாடியில் இருந்தபடி கீழே நடந்து சென்றுகொண்டிருந்த, அந்த முதல் மதிப்பெண் எடுத்த மாணவனை கல்லால் அடிக்க முயல்கிறான். ஆனால், அந்த கல் தவறுதலாக தலைமையாசிரியன் மண்டையில் விழுந்து ரத்தக் கொட்டுகிறது.
முத்து மீது சுமத்தப்படும் பழி:
இதனை கண்டதும் மனோஜ் அங்கிருந்து தப்பியோட, அப்போது அவ்வழியாக வந்த முத்து என்ன நடந்தது என கீழே எட்டிப் பார்க்கிறான். இதற்குள் கீழே கூடியிருந்த ஒட்டுமொத்த கூட்டமும், மேலே நின்றிறிருந்த முத்துவை பார்த்து அவன் தான் தலைமையாசிரியரை தாக்கியதாக கருதுகின்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மனோஜ், ஆமாம் நான் பார்த்தேன் முத்து தான் கல்லை எடுத்து தலைமையாசிரியரை அடித்தான் என குற்றம்சாட்டுகிறான். மேலும், அன்று அனைவரும் முன்பு முட்டி போடவைத்ததற்கு பழிவாங்கவே இப்படி செய்திருக்கிறான் என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு, இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.
சீர்திருத்தப் பள்ளிக்கு செல்லும் முத்து
நாளைய எபிசோடுக்கான ப்ரோமோவில், பள்ளிக்கு வரும் விஜயா, முத்து மீதான குற்றச்சாட்டுகளை அறிந்ததும் என்ன ஏது என்று விசாரிக்காமலேயே அவனை சரமாரியாக தாக்குகிறார். பாட்டியின் வளர்ப்பால் தான் அவன் இப்படி ஆகிவிட்டான் எனவும் குற்றம்சாட்டுகிறார். தான் தவறு செய்யவில்லை என முத்து புலம்புவதை அவர் காதில் கூட வாங்கவில்லை. இந்த பிரச்னையால் தான் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் முத்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவது போல் தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் இப்போது மட்டுமின்றி, கடந்தகாலத்திலும் முத்து எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கும் மனோஜ் தான் காரணம் என்பதும், சரியான வயதில் தாயின் பாசம் கிடைக்காததன் விளைவாகவே முத்து இப்படி மாறியிருப்பதையும் இன்றைய எபிசோட் விளக்கியுள்ளது.





















