மேலும் அறிய

பயில்வான் ரங்கநாதன் விரைவில் கைது?! சொன்னதை செய்த சுசித்ரா! பரபரப்பு புகார்!

தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சினிமா பாடகி சுசித்ரா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சமீபமாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனின் பரபரப்பான கருத்துக்களால் கோலிவுட் வட்டாரம் திகிலாகி வருகிறது. அவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளும், புகாரும் எழுந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாடகி சுசித்ரா குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். 

இந்தநிலையில், தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சினிமா பாடகி சுசித்ரா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பாடசி சுசித்ரா குறித்து சில கருத்துக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாடகி சுசித்ரா நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு நேரடியாக போன் செய்து என்னை பற்றி நீங்கள் கூறிய தகவல்களுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா..? இருந்தால் காட்டுங்கள் என்று தெரிவித்தார். இந்த ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதற்கிடையே பாடகி சுசித்ரா சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் மீது நடிகர் பயில்வான் ரங்கநாதன் எந்தவித ஆதாரமுமின்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். என் மீது வேண்டுமென்றே அவதூறாக கருத்துகளை கூறி என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் எனக்கு பாடல் பாடும் வாய்ப்பு குறைந்து வருகிறது. எனவே, என்னை பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறான கருத்துகளை தொடர்ந்து பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். 

பயில்வான் ரங்கநாதன் :

பயில்வான் ரங்கநாதன் விரைவில் கைது?! சொன்னதை செய்த சுசித்ரா! பரபரப்பு புகார்!

பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். 

மேலும், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒருவழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு. 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். சில நேரங்களில் உறுதி செய்யப்ப்படாத  தகவல்களையும் பார்த்தது போலவே சொல்லி சர்ச்சையில் சிக்குவதும் பயில்வானின் வேலை. இப்படி சினிமாத்துறையிலேயே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் பயில்வான் ரங்கசாமி மீது தற்போது சட்ட ரீதியாக புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரங்கநாதன் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget