மேலும் அறிய

Sai Abhyankar : தனுஷ் கொடுத்த பாராட்டுதான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது.. சாய் அப்யங்கர் சொன்னது என்ன?

நடிகர் தனுஷ் தான் தனது இரு பாடல்களையும் முதலில் கேட்டு பாராட்டியதாக கட்சி சேர புகழ் சாய் அப்யங்கர் தெரிவித்துள்ளார்

சாய் அப்யங்கர்

பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் சாய் அப்யங்கர். 21 வயதாகும் இவர் சென்னை ஐஐடியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். தனது பெற்றோர்களைப் போலவே சாய் அப்யங்கர் இசையில் ஆர்வம் கொண்டவர். பாடல்கள் எழுதுவது , பாடுவது , இசையமைப்பது , ப்ரோகிராமிங் , என தொழில்நுட்ப ரீதியாகவும் பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்கள் முன்பு இவரது கட்சி சேர பாடல் வீடியோ வெளியானது. திங் மியூசிக் இந்தப் பாடலை வெளியிட்டது.

பாட்டும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க 2 யூடியுபில் மில்லியன் பார்வையாளர்களை எட்டியது கட்சி சேர பாடல். இந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் ஆச கூட, பாடலும் வைரலாகியுள்ளது. ஸ்டார் படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் இந்தப் பாடலில் நடித்துள்ளார். 

வெளியான இரு பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார் சாய் அப்யங்கர். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது இசையை கேட்டு முதலில் தனக்கு பாராட்டு தெரிவித்தது நடிகர் தனுஷ் தான் என்று சாய் அப்யங்கர் தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷ் வார்த்தை பலித்துவிட்டது

நிகழ்ச்சியில் பேசிய சாய் “என்னுடைய முதல் பாட்டான ”கட்சி சேர” பாட்டை தனுஷிடம் போட்டு காட்டினேன். அந்த பாட்டு சிறப்பாக வந்திருப்பதாக அவர் சொன்னார்.

அப்போதே ”ஆச கூட” பாட்டையும் அவரிடம் போட்டுக் காட்டினேன். பாடலின் ப்ரோகிராமிங் சிறப்பாக இருப்பதாகவும் பாடல் வெளியானால் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று அவர் சொன்னார் .

முடிந்த அளவிற்கு பாடல்களை எளிமையானதாக இசையமைக்க ஆலோசனை வழங்கினார். அவர் சொன்னது போலவே கட்சி சேர பாடலும் ஆச கூட பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விரைவில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கக் கூடிய ஒரு பெரிய தகவல் வெளியாகும்” என்று சாய் அப்யங்கர் தெரிவித்துள்ளார்.

இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தனுஷ்

இன்று முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தை இசையமைக்க ஊக்குவித்தவர் தனுஷ் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்த தகவல். தன்னைச் சுற்றி இருக்கும் இளம் கலைஞர்களை தனுஷ் தொடர்ச்சியாக ஊக்குவித்து வருவது பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?

Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?

Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!

சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!

Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!

Embed widget