Arivu : உன்னால மட்டும்தான் இத பண்ண முடியும்...ராப் பாடகர் அறிவிடம் பொறுப்பை ஒப்படைத்த விஜய்
விஜயின் குரலை பதிவு செய்தது தன் வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவு என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப்பாடலை இயற்றியது குறித்து பாடகர் அறிவு தெரிவித்துள்ளார்
தவெக மாநாட்டில் விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்றது. 2 லட்சம் தொண்டர்கள் வரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மாநாட்டில் பேசிய விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்கள், அரசியல் இலக்கு குறித்து பேசினார். பிளவுவாத மற்றும் குடும்ப ஆட்சி, திராவிட மாடல் என்று குறிப்பிட்டு பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வே தங்களது கருத்து மற்றும் அரசியல் எதிரி என்று கூறியுள்ளார் விஜய். இது தவிர்த்து தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்த போது தன்னை கூத்தாடி என்று விமர்சித்தவர்களுக்கும் விஜய் பதில் கூறினார்.
பெரியாரின் கொள்கைகளை ஏற்கிறோம். ஆனால் அவரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை மட்டும் ஏற்கவில்லை.திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம் திருமாவளவன் கூறிய ஆட்சி, அதிகாரத்தில் பங்கு. இந்த விவகாரம் தி.மு.க. – விசிக இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என்று கூறி
தவெக கொள்கைப்பாடலை இயற்றிய பாடகர் அறிவு
View this post on Instagram
தவெக மாநாட்டில் கட்சியில் கொள்கை பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. வெற்றி வெற்றி என தொடங்கும் இந்த பாடல் கட்சியின் கொள்கை விளக்கும் வகையில் அமைந்தது. ராப் பாடகர் அறிவு இந்த பாடலை இயற்றியுள்ளார். ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் 'வாத்தி ரைடு' அறிவு பாடியிருந்தார். தவெகவின் கொள்கைப்பாடலை இயற்றியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவு பதிவிட்டுள்ளார். விஜயின் ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று தான் விஜயிடம் கேட்டதாகவும் 'உன்னால மட்டும்தான் இத பண்ண முடியும் ' என்று விஜய் பதிலளித்துள்ளதாக அறிவு பதிவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை தனக்கு கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்த அறிவு விஜயின் குரலை பதிவு செய்தது தான் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு என்றும் தெரிவித்துள்ளார்.