Niddhi Agerwal Simbu Relation: சிம்புவுடன் காதலா? இருக்கா? இல்லையா? பதிலை பூசி மெழுகிய நிதி அகர்வால்! குழப்பத்தில் ரசிகர்கள்!
இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்திலும், சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அவர் நடித்த அந்த 2 படங்களும் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நிதி அகர்வால் பிஸினெஸ் மேனேஜ்மெண்டில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், தேர்ந்த டான்சரும் கூட. அவருக்கு தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை புரிந்துக் கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது படங்களை பதிவிடும் நிதி அகர்வாலுக்கு லைக்ஸ்கள் குவிகின்றன. சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்த பிறகு நடித்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் நிதி அகர்வால்.
இந்நிலையில் இவருக்கும், சிம்புவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வதந்திகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் குறித்து எழுதப்படும் விஷயங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு நித்தி, "வதந்திகளில் சில உண்மைகள், சில பொய்கள். மிக முக்கியமானது என்னவென்றால், பெற்றோருக்கு எது உண்மை, எது இல்லை என்று தெரிந்தால் போதும். மக்கள் சொல்வதைப் பொறுத்தவரை, இது ஒரு ஹை-ஸ்கூல் ட்ராமா போன்றது. இறுதியில், நாம் செய்யும் வேலைதான் எல்லாவற்றையும் விட அதிகமாக பேசுகிறது. அது நடக்கும் வரை காத்திருக்கிறேன்." என்று கூறியிருந்தார். இதனால் சிம்புவுக்கும் இவருக்கும் காதல் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஆமாவா, இல்லையா என அடித்துக் கூறாமல் பதிலை பூசி மெழுகிறார் நிதி என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்
ஏற்கனவே கிரிக்கெட் வீரரை கே.எல்.ரகுலை காதலித்த நிதி அகர்வால், பின்னர் கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார். சிம்புவை பொறுத்தவரை நயன்தாரா, ஹன்சிகா என இரு நடிகைகளை காதலித்து பின்னர் தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது. சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு தற்போது கவுதம் வாசுதேவ் இயக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.