SIIMA AWARDS 2023: கெத்து காட்டிய மலையாள படங்கள்.. சைமா விருது வென்ற பிரபலங்கள்..முழு விபரம் இதோ..!
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் (SIIMA AWARDS 2023) விழாவில் விருது வென்ற மலையாளப் படங்கள் கலைஞர்களின் விவரங்களை காணலாம்.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் (SIIMA AWARDS 2023) விழாவில் விருது வென்ற மலையாளப் படங்கள் கலைஞர்களின் விவரங்களை காணலாம்.
சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023)
இந்திய சினிமாவில் மாநில அரசு, மத்திய அரசு, திரைப்பட விழா என எத்தனையோ நிகழ்வுகளாக திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) என தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா முக்கியமானது. காரணம் இந்த நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக பணியாற்றிய பிரபலங்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினரும் சைமா விருது ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் நிகழ்வானது தொடங்கப்பட்ட நிலையில், இது வெற்றிகரமாக 11வது ஆண்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்த விழாவானது இம்முறை துபாயில் நடைபெற்றது. செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய இருதினங்கள் இந்த விழாவானது நடைபெற்றது. முதல் நாளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இரண்டாவது நாளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சர்வதேச விருது விழாக்களில் மலையாளப் படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களின் சாதனைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியான பல்வேறு படங்கள், பாடல்கள் அனைத்து மொழி ரசிகர்களிடமும் பிரபலமாகின. சைமா விருது விழாவில் விருது வென்றத் மலையாளப் படங்களைப் பார்க்கலாம்.
சிறந்த நடிகர்
கடந்த ஆண்டு வெளியாகி மக்களால் கொண்டாடப்பட்ட தள்ளுமாலா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் டொவினோ தாமஸ் வென்றார். மேலும் சிறந்த நடிகருக்கான விமர்சகர் தேர்வுக்கான விருதை குஞ்சகோ போபன் வென்றார்.
சிறந்த நடிகை
சிறந்த நடிகைக்கான (விமர்சகர் தேர்வு) விருதை ஜெய ஜெய ஜெய படத்திற்காக தர்ஷனா ராஜேந்திரன் வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை ப்ரோ டாடி படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் வென்றார்.
சிறந்த பாடலாசிரியர்
பீஷ்ம பருவம் படத்தில் இடம்பெற்ற பருதீஸா என்கிற பாடல் இணையதளத்தில் ரீல்ஸ்களாக வைரலாகியது. இந்த பாடலை எழுதிய விநாயக் சசிகுமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வென்றார்.
சிறந்த பாடகி
பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் இடம்பெற்ற மயில் பீலிப் பாடலைப் பாடிய மிருதுலா வாரியர் சிறந்த பாடகிக்கான விருதை வென்றார்.
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஷரண் வேலாயுதன் (படம் - சொளதி வெல்லக்கா )
சிறந்த அறிமுக நடிகர் – ரஞ்சித் சஜீவ் – (படம்- மைக்)
சிறந்த துணை நடிகை – பிந்து பணிக்கர் ( படம்- ரோர்ஷாச்)
நடுவர் தேர்வு விருது – பாசில் ஜோசஃப் (படம்- ஜய ஜய ஜய)
சிறந்த அறிமுக நடிகை – காயத்ரி ஷங்கர் (படம்- ஞா தான் கேஸ் கொடு)
சிறந்த துணை நடிகர் – லால் (படம் – மஹாவீரயர் )
சிறந்த வில்லன் கதாபாத்திரம் – வினித் ஸ்ரீனிவாசன் (படம்- முகுந்தன் உன்னி அஸோசியேட்ஸ்)
சிறந்த அறிமுக இயக்குநர்- அபிநவ் சுந்தர் நாயக் (படம்- முகுந்தன் உன்னி அஸோசியேட்ஸ்)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் – உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் ( படம் – மேப்படியான்)
சிறந்த படம் – ஞான் தான் கேஸ் கொடு