Maayon | ‛கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யம் இருக்கு தம்பி’ - மிரட்டும் சிபிராஜின் மாயோன் டீசர்!
’புதையல் நிறைந்த கோயில் அதனை சுற்றியிருக்கும் மர்மங்கள் , அந்த மர்ம முடிச்சுகளை ஆராயும் கதாநாயகன்’
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவர் நடிகர் சிபி ராஜ். சத்தியராஜின் மகனான இவர் சிறந்த நடிகராக இருந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்க போராடி வருகிறார். அந்த வகையில் தற்போது கிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயோன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மாயோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் காட்சிகளை மிரட்டும் வகையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் . புதையல் நிறைந்த கோயில் அதனை சுற்றியிருக்கும் மர்மங்கள் , அந்த மர்ம முடிச்சுகளை ஆராயும் கதாநாயகன் மற்றும் குழுவினர் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
Here’s the Official Teaser of my next film #Maayon!Pls share friends 😊🙏🏻https://t.co/OlCQN7BIn8#MaayonTeaser @ManickamMozhi @DirKishore @actortanya @ksravikumardir @RamprasadDop #ilayaraaja @DoneChannel1 pic.twitter.com/mD9rb7PzKq
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) October 8, 2021
டீஸரை ”இந்த கோவில்ல கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யம் இருக்குது தம்பி” என முடித்துள்ளனர். விரைவில் படத்தின் டிரைலர் உள்ளிட்ட அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாயோன் படத்தை டபுள் மீனிங் புரடக்ஷன் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கான திரைக்கதையையும் அருண் மொழி மாணிக்கம் எழுதியுள்ளார். மாயோன் படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்துள்ளார். இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். ராம் பிரசாத் மாயோன் படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிராஜ் அடுத்ததாக வினோத் டி.எல் இயக்கத்தில் , விஜய் கே செல்லய்யா தயாரிப்பில் ‘ரங்கா’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர் என்னும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் காட்டுக்குள் நடக்கும் கிரைமை மையப்படுத்தி உருவாகவுள்ளது.சிபிராஜ் நடிப்பில் இறுதியாக கபடதாரி என்னும் ரீமேக் படம் வெளியானது. அதில் டிராஃபிக் பிரிவில் இருந்தாலும் கிரைம்பிரிவில் ஆர்வம் உள்ள காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் சிபிராஜ், பல ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்த கிரைமின் உண்மையான குற்றாவளிகளை எப்படி அவர் கண்டுபிடிக்கிறார் என்பதே கபடதாறி படத்தின் கதைச்சுருக்கம் .இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.