Shruti Haasan : ”ஆமா, இந்த நோயோடு போராடுறேன்..” : துணிச்சலாக வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன்..
"எனது உடல் தற்போது சீராக இல்லை. ஆனாலும் நன்றாக சாப்பிட்டு , தூங்கி , உடற்பயிற்சி செய்ய முடிகிறது"
ஸ்ருதிஹாசன் :
கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனை அறியாதாவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்திய சினிமாவில் பலராலும் அறியப்படும் ஸ்ருதி எப்போதுமே திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களின் கேள்விக்கு எப்போதுமே வெளிப்படையாகவே பதிலளிப்பவர்.
View this post on Instagram
’எனக்கு PCOS இருக்கு ‘
ஸ்ருதிஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் PCOS என்னும் கருப்பை நீர்க்கட்டிகளை ஒத்த பிரச்சனையால் தான் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்த பதிவினை உடற்பயிற்சி வீடியோ ஒன்றுடன் பதிவு செய்துள்ளார். அதில் “ என்னுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யுங்கள் . நான் தற்போது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடன் சில ஹார்மோனல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். இது சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கூடிய சவாலான போராட்டம் ,ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சனையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன். எனது உடல் தற்போது சீராக இல்லை. ஆனாலும் நன்றாக சாப்பிட்டு , தூங்கி , உடற்பயிற்சி செய்ய முடிகிறது . அதற்காக நான் நன்றி சொல்கிறேன் ! எனது உடலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதனால் அந்த ஹார்மோனும் உடலில் பெருக்கெடுத்து ஓடட்டும் ! இது ஒரு பிரசங்கமாக தெரியலாம்! ஆனால் இந்த சவால் ஒரு பயணம் . அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது “ என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
மன அழுத்தம் :
முன்னதாக ஸ்ருதிஹாசன் நேர்காணல் ஒன்றில் தனக்கு சிறு வயதில் இருந்தே மன அழுத்தம் இருந்ததாகவும் அதற்காக தான் மன நல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஸ்ருதிஹாசன் தனது காதல் வாழ்க்கையோ அல்லது தனிப்பட்ட பிரச்சனையோ எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பகிர்ந்துக்கொள்ளக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | SP Velumani Scam : ’வேலுமணி ஊழலுக்கு உதவிய அதிகாரிகள்’ சிக்கிய 12 பேரின் Exclusive பட்டியல்..!