விக் இல்லாமல் வெளியே வர மாட்டார்கள்...ரஜினி பற்றி சக்திமான் முகேஷ் கண்ணா ஓப்பன் டாக்
பிரபல தொலைக்காட்சித் தொடர் சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

தனது ஸ்டைல் மற்றும் எளிமையால் மட்டுமே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் ரஜினி. தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழைப் போலவெ ரஜினிக்கு வடமாநிலங்களில் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் பலர் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த வகையில் சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா ரஜினி பற்றி புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் பற்றி முகேஷ் கண்ணா
1997ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகி குழந்தைகளிடம் பிரபலமானத் தொடர் சக்திமான்.பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி எனப்படும் சக்திமான் கேரக்டரில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். சக்திமான் கதை திரைபப்டமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பேச்சுவார்த்தையில் உள்ளன. முகேஷ் கண்ணா சமீபத்தில் சக்திமான் உடை அணிந்து சக்திமான் புதிய சீசனை அறிவித்தார். சமீபத்தில் தமிழ் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசினார்.
He @rajinikanth is d biggest superstar in the country than any Bollywood star❤️✨️
— Achilles (@Searching4ligh1) April 2, 2025
Show me one actor in d world who will come out to meet his fans just after brushing without wig & makeup. His fan base & stardom is incomparable 🙌 -#Shakthimaan #Coolie #Rajinikanth #Jailer2 pic.twitter.com/u2LyL5gQcl
" என்னுடைய வீட்டில் கோயில் ஒன்று கட்டி வைத்திருக்கிறேன். தினமும் காலையில் கடவுளை வணங்கிவிட்டுதான் மற்ற வேலைகளை தொடங்குவேன். அந்த வகையில் ரஜினிகாந்தின் பக்தி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் வருடந்தோறும் இமயமலைக்கு பாபாவின் சமாதியை பார்க்க செல்வதாக சொன்னார்கள். நான் அவரை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் நான் ரஜினியின் பெரிய ரசிகன். இன்றைய சூழலில் எந்த நடிகரும் மேக் அப் இல்லாமல் வெளியே வரமாட்டார். ஆனால் ரஜினி காலை எழுந்தது முதலில் தனது வீட்டிற்கு வெளியே இருக்கும் ரசிகர்களை சந்தித்து விட்டுதான் மற்ற வேலைகளை பார்ப்பார் என்று சொன்னார்கள். மற்றவர்களைப் போல் விக் இல்லாமல் இயல்பாக தன்னை வைத்துக் கொள்வது பாலிவுட்டில் எந்த நடிகராலும் செய்ய முடியாதது. " என அவர் தெரிவித்துள்ளார்





















