‛செல்வராகவனோட ஷூட்டிங் முடியுற வரைக்கும் பேசல’ -பீஸ்ட் நடிகர் நடித்த ஷாஜி சென்!
எனக்கும் செல்வராகவனுக்கும் முதல் நாளே பிரச்சனைலதான் ஆரம்பிச்சிச்சு, கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் சரியா பேசிக்கல. வருவாரு, டயலாக் படிப்பாரு, நடிப்பாரு, அப்புறம் புகை…
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்ஜிகே உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களை இயக்கிவர் இயக்குநர் செல்வராகவன். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்த செல்வராகவன் திடீரென சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கடந்த வாரம் அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகிவிட்டது. நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி ரிலீசானது பீஸ்ட். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக மாஸ் ஹீரோவான விஜய்யை நெல்சன் வீணடித்துள்ளதாக நெகட்டிவான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஆயினும் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் அரசியல்வாதியாக எழுத்தாளர் ஷாஜி சென் நடித்திருந்தார். அவரை பற்றி செல்வராகவன் கொடுக்கும் கமெண்டுகள் ரசிகர்களை கவர்ந்தது. அவரை பற்றி பேசும்போதெல்லாம் முகத்தில் ஒரு வெறுப்பை வைத்திருந்த செல்வராகவனுடையது நடிப்பில்லை போல என்று தோன்றவைக்கும் செய்தியை ஷாஜி சென் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் பேசுகையில், "எனக்கும் செல்வராகவனுக்கும் முதல் நாளே பிரச்சனைலதான் ஆரம்பிச்சிச்சு, கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் சரியா பேசிக்கல. நான் கேரவனுக்குள்ள ஃபோன் பேசிட்டு இருந்தேன், திடீர்னு கதவை தட்ற சத்தம் கேட்டுச்சு. திறந்தா, சத்தம் போட்டு 'என்ன இவ்வளவு சத்தமா பேசறீங்க, அவர் எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா'ன்னு சத்தமா கேக்குறார்.
அவரு செல்வராகவனோட மேனேஜர். எனக்கு அந்த ரூம்ல அவர் இருக்காருண்ணே தெரியாது. நான் யார்கிட்டயோ பேசிட்டு இருந்தேன். அதுக்கு இவ்வளவு ஹார்ஷா பேசுவீங்களா, கொஞ்சம் மெதுவா பேசுங்கன்னு சொன்னா மெதுவா பேசப்போறேன்னு சொன்னேன். அதுல இருந்து நானும் அவரும் பேசவே இல்ல, அவருக்கு தனி கேரவன் கொடுத்துட்டாங்க. எனக்கு டைரக்டர்ன்னு சொன்னதும் யாருன்னே தெரியல முதல்ல,நெல்சன சொல்றாங்களா யாரை சொல்றாங்கன்னு தெரில. செல்வா சார்ன்னு சொன்னாங்க எனக்கு சரியா தெரியல. அப்புறம் ஷூட்டிங் நடக்கும்போது நான் உங்க புதுப்பேட்டை படமெல்லாம் பாதுருக்கேன் ரொம்ப பிடிக்கும் ன்னு சொன்னேன் ஆனா அதுக்கும் அவர் பெருசா ரியாக்ட் பண்ணல. அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல யார் கூடவும் பெருசா பேசிக்கல. வருவாரு, டயலாக் பேப்பரை படிப்பாரு, நடிப்பாரு, அப்புறம் புகை. நமக்கு புகையே ஆகாது, ஆஸ்த்மா வேற இருக்கு. அப்பவே முடிவு பண்ணேன் நமக்கு இவருக்கும் செட் ஆகாதுபோலன்னு. படத்துலயும் அதே மாதிரி கேரக்டர்ன்றதால அப்படியே இருக்கட்டும்ன்னு விட்டுட்டேன்" என்று கூறினார்.