Watch Video: லைக்ஸ்களை அள்ளும் சித்து, ஸ்ரேயாவின் சின்னத்திரை ‘அரபிக் குத்து’
நேற்று மாலை முதல் அரபிக் குத்து வைரலாகி வரும் நிலையில், திரையரங்குகளில் ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது
![Watch Video: லைக்ஸ்களை அள்ளும் சித்து, ஸ்ரேயாவின் சின்னத்திரை ‘அரபிக் குத்து’ Serial actors siddhu and shreya dance for trending arabi kuthu and the reel goes viral Watch Video: லைக்ஸ்களை அள்ளும் சித்து, ஸ்ரேயாவின் சின்னத்திரை ‘அரபிக் குத்து’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/8645931b5b51c53b722c2a0df912472a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, முதல் பாடலான ‘அரபிக் குத்து’ நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில் அரபிக் குத்து ரீல்ஸ்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், பிரபல சின்னத்திரை ஜோடியான சித்து, ஸ்ரேயா இருவரும் சேர்ந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோ சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரீல் ஜோடியான சித்து, ஸ்ரேயா அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் அவர்கள், அவ்வப்போது வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
View this post on Instagram
நேற்று மாலை முதல் அரபிக் குத்து வைரலாகி வரும் நிலையில், ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது. எனினும், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து, அபர்ணா தாஸ், ஜான் விஜய், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர் உள்பட ஏராளமான பட்டாளமே நடித்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டு பண்டிகையை அடுத்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் 14-ம் தேதியா அல்லது 28-ம் தேதியா என்பது உறுதியாகவில்லை. படம் வெளியாவதற்கு தயாராகி வருவதால், ப்ரொமோஷன் பணிகளும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதனால், படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை அறிவிக்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)