![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலை கொண்டாடுவேன்.... பொன்னியின் செல்வன் பாடலைப் புகழ்ந்த செல்வராகவன்!
“என் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலைக் கொண்டாடுவேன்” எனக் குறிப்பிட்டு செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.
![வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலை கொண்டாடுவேன்.... பொன்னியின் செல்வன் பாடலைப் புகழ்ந்த செல்வராகவன்! selvaraghavan tweets praising ponniyin selvan alaikadal song and says he will cherish it all his life வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலை கொண்டாடுவேன்.... பொன்னியின் செல்வன் பாடலைப் புகழ்ந்த செல்வராகவன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/01e77d3c341cbae361be14cebf9fbae81680769228466574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகி கோலிவுட்டின் பிரமாண்ட வெற்றிப்படமாக உருவெடுத்தது.
ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் ஆல்பம்
சுமார் 500 கோடிகள் வரை வசூலித்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பொன்னியின் செல்வன் படம் ஹிட் அடித்த நிலையில், இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்டன.
மணிரத்னத்தின் வழக்கமான பார்ட்னரும் ஆதர்ச இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், பொன்னி நதி, சோழா சோழா, ராட்சஸ் மாமனே, அலைகடல், தேவராளன் ஆட்டம், சொல் என ஆறு பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.
பூங்குழலியின் மயக்கும் மெலடி
ஆறு பாடல்களுமே ஹிட் அடித்து பொன்னியின் செல்வன் ஆல்பம் சென்ற ஆண்டு ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற நிலையில், இந்தப் படத்தில் பூங்குழலில் கதாபாத்திரத்துக்காக இசைக்கோர்ப்பு செய்யப்பட்ட ‘அலைகடல்’ பலரது ப்ளே லிஸ்டிலும் சிறப்பு இடம்பெற்றது .
அண்டாரா நண்டி எனும் பாடகி பாடியுள்ள இந்த மெலடி பாடல், மயக்கும் இசையுடன், ;சமுத்திரக்குமாரி’ என அழைக்கப்படும் படகோட்டி பெண்ணான பூங்குழலி பாத்திரம், இரவு நேர கடல் அலைகளுக்கு மத்தியில் காதலும் ஏக்கமும் ததும்ப படகோட்டி செல்லும் காட்சிக்கு ஏற்ப இசைக்கோர்ப்பு செய்யப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்தது.
மேலும் லிரிக்கல் வீடியோ வெளியானது முதலே இந்தப் பாடலுக்கு பிரத்யேக ரசிகர் குழு உருவான நிலையில், இந்தப் பாடலின் பின்னணியில் பூங்குழலி படகோட்டும் காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
செல்வராகவன் ட்வீட்
இந்நிலையில் தற்போது அலைகடல் பாடலைப் புகழ்ந்து பிரபல இயக்குநர் செல்வராகவன் முன்னதாக ட்வீட் செய்துள்ளார்.
“என் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலைக் கொண்டாடுவேன்” என அலைகடல் பாடலைக் குறிப்பிட்டு செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் வழக்கமாகப் பணியாற்றி வந்துள்ள செல்வராகவன் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலை இவ்வாறு புகழ்ந்து பதிவிட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
One of the songs that I will cherish all my life 😍😍 pic.twitter.com/cBFniuoV2Y
— selvaraghavan (@selvaraghavan) April 5, 2023
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
அக நக முழு வெர்ஷன், ஆழி மழை கண்ணா, சின்னஞ்சிறு, சின்னஞ்சிறு நிலவே, இளையோர் சூடார், ஷிவோஹம், வீர ராஜ வீரா என ஏழு பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தப் பாடல்களும் ஹிட் அடித்து எதிர்பார்ப்புகளை எகிறவைத்து வருகின்றன.
மேலும் படிக்க: Salman Khan: ஃபோனில் உங்கள் குழந்தை இதை பார்ப்பதை விரும்புகிறீர்களா...? ஓடிடி தளங்களில் மேலோங்கும் ஆபாசம்.. சல்மான் கான் காட்டம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)