மிரள வைத்ததா டைனோசர்களின் சாம்ராஜ்ஜியம்...?ஜூராசிக் வெர்ல்டு ரீபர்த் திரைப்படம் விமர்சனம் இதோ
Jurassic World Rebirth Review : உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளோடு திரையரங்கில் வெளியாக இருக்கும் 'ஜூராசிக் வெர்ல்டு ரீபர்த்' படத்தின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன

Jurassic World Rebirth விமர்சனம்
அழிந்துபோன டைனோசர்களை மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கிய 'ஜுராசிக் பார்க்' 1993 ஆம் ஆண்டு வெளியாகி உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மரபனுக்கள் வழியாக மீண்டும் உயிர்பிக்கப்படும் படும் டைனோசர்கள் ஏற்படுத்தும் பேரழிவுகளில் இருந்து மனிதர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் மையக்கதை. ஜுராசிக் பார்க் படத்தைத் தொடர்ந்து இதே மையக்கதையை அடிப்படையாக கொண்டு இதுவரை ஆறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் பெரியளவில் கவனமீர்க்க தவறிவிட்டன. இதனால் ஜுராசிக் பார்க் பட ரசிகர்கள் ஆர்வமிழந்து போனார்கள். அந்த வகையில் தற்போது 7ஆவது பாகமாக வெளியாகியுள்ள படம்தான் ஜூராசிக் வெர்ல்டு ரீபர்த்'.
கேரத் எட்வர்ட்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹர்ஷலா அலி, ஜொனாதன் பெய்லி, ரூபர்ட் நண்பர், மானுவல் கார்சியா-ருல்ஃபோ, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ, ஆட்ரினா மிராண்டா, பிலிப்பைன் வெல்ஜ், பெச்சிர் சில்வைன், எட் ஸ்க்ரீன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூலை 4 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் முதற்கட்ட விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
Jurassic World Rebirth கதை
ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த் திரைப்படத்தின் கதைக்களமானது, இந்த திரைப்பட உலகின் தொடக்கப் புள்ளியான ஜுராசிக் பார்க்கில் இருந்து தொடங்குகிறது. வெளியுலகத்திற்கு டைனோசர்கள் அழிந்துவிட்டாலும் அவை ஒரு தீவில் தனித்து வாழ்ந்து வருகின்றன. இந்த தீவில் வாழும் ஒரு சில டைனோசர்களின் மரபனுக்கள் மூலமாக ஜூராசிக் பார்க் படத்தில் வந்த டைனோசர்கள் உருவாக்கப்பட்டன. தற்போது ஒரு கார்பரேட் நிறுவனம் நிலம் , நீர் , காற்று ஆகிய மூன்று இன டைனோசர்களின் மரபனுவின் வழி ஒரு மருந்தை தயாரிக்க நினைக்கிறது. இதற்காக ஸ்கார்லெட் ஜோகன்சன் தலைமையிலான ஒரு மருத்துவ குழுவை இந்த ஆபத்தான தீவுகளுக்கு அனுப்புகிறது. இந்த குழு டைனோசர்களின் மரபனுக்களை எடுக்க எதிர்கொள்ளும் சவாலும் சாகசகங்களுமே ஜுராசிக் வெர்ல்டு ரீபர்த் படத்தின் கதை
ஜுராசிக் வர்ல்டு படவரிசையில் வெளியான முந்தைய இரு படங்களைப் போல் இல்லாமல் இந்த பாகம் விமர்சககர்களை கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். முதல் பாகத்துடன் தொடர்புடைய ஒரு ஒன்லைனை வைத்துக் கொண்டு அதை சுவாரஸ்யம் , நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான ஒரு படமாக வழங்கியிருக்கிறார்கள். ஜூராசிக் பார்க் படங்களில் நாம் பார்த்து ரசித்த பொதுவான அம்சங்கள் அனைத்தும் இந்த படத்திலும் இருக்கின்றன. தொழில் நுட்ப நேர்த்தி மற்றும் நடிகர்கள் இந்த படத்தை புதுமையான அனுபவமாக மாற்றுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளார். இருந்தாலும் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் படத்தை போலி செய்தே அடுத்தடுத்து வரும் பாகங்கள் உருவாகின்றன. இதற்கு மேல் இதில் புதிதாக காட்ட ஏதும் இருக்கிறதா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை.





















