Mrs World 2022 : 21 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய கிரீடம்... 'திருமதி உலக அழகி' பட்டத்தை வென்று சாதித்தவர் யார்?
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த சர்கம் கௌஷல் 'திருமதி உலக அழகி' போட்டியில் பட்டத்தை வென்று கிரீடத்தை சூடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருமணமான பெண்களுக்கான திருமதி உலக அழகி போட்டிகள் 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருமதி உலக அழகி போட்டி அமெரிக்கா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆண்டு திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியா கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளது.
ஏராளமான நாடுகள் இந்த 'திருமதி உலக அழகி' போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 63 நாடுகளை சேர்ந்த திருமணமான பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அதில் காஷ்மீரை சேர்ந்த சர்கம் கௌஷல் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார். சர்கம் கெளஷலுக்கு சென்ற ஆண்டு 'திருமதி உலக அழகி' பட்டம் வென்ற ஷைலீன் ஃபோர்டு கீரிடத்தை சூடினார்.
View this post on Instagram
2001ம் ஆண்டு நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் இந்த பட்டத்தை சூடினார். அதற்கு பிறகு 21 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இந்த பட்டத்தை இந்தியாவை சேர்ந்த அழகி கைப்பற்றியுள்ளது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. 2001ம் ஆண்டு பட்டம் பெற்ற டாக்டர் அதிதி கோவித்ரிகர் தற்போது இந்த அழகி போட்டியின் நடுவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இந்த பட்டத்தை அமெரிக்கா தான் தட்டி செல்லும் ஆனால் இந்த ஆண்டு இந்தியா பெற்று நமது நாட்டை பெருமை அடையச் செய்துள்ளது.
View this post on Instagram
ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற சர்கம் கௌஷல் காஷ்மீரை சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த கிரீடத்தை சூடியவர் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். 21 ஆண்டுகளுக்கு பிறகு திருமதி உலக அழகி பட்டம் இந்தியாவிற்கு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.