Saravanan Meenakshi: 8 வருட காத்திருப்பு... பெற்றோர் ஆகும் ‛சரவணன் மீனாட்சி...’
மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி ஸ்ரீஜா வளைகாப்பு சம்பந்தமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி ஸ்ரீஜா வளைகாப்பு சம்பந்தமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். அதனைத்தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீரியலில் நடிகை ஸ்ரீஜாவுடன் இணைந்து கதாநாயகனாக நடித்தார்.
View this post on Instagram
நெடுந்தொடராக ஒளிப்பரப்பான இந்த சீரியலுக்கு நாளடைவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதே அளவுக்கு செந்தில் ஸ்ரீஜா தம்பதியையும் ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். ரீல் ஜோடிகளாக வலம் வந்த இந்த ஜோடி நிஜ வாழ்கையிலும் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தையும் சீரியல் போல பிரமாண்டமாக நடத்தியது விஜய் டிவி. திருமணம் ஆன பின்னரும் ‘மாப்பிள்ளை’ சீரியலில் இந்த ஜோடி ஒன்றாக இணைந்து நடித்தது.
அதன் பின்னர் ஸ்ரீஜா சீரியல்களில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் மிர்ச்சி செந்தில் தாங்கள் பெற்றோர் ஆக உள்ளதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீஜாவின் வளைகாப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அந்தப்பதிவில், “ நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் செந்தில். இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மிர்ச்சி செந்தில் தொடர்ந்து எவனோ ஒருவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

