Samantha Ruth Prabhu: சண்டை காட்சியில் நிஜமாகவே அடிவாங்கிய சமந்தா.. ஷுட்டிங்கில் நடந்த ஷாக் சம்பவம்!
மா இன்டி பங்காரம் படத்தின் ட்ரெய்லரில் சமந்தா வில்லன்களை துவம்சம் செய்யும் வகையில் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதில் உண்மையிலேயே தான் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மா இன்டி பங்காரம் (Maa inti bangaram) படத்தில் நடித்தபோது தனக்கு அடிபட்டதாக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் “மா இன்டி பங்காரம்”. இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இதன் திரைக்கதையை சமந்தாவின் கணவரான ராஜ் நிடிமொரு எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஆக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கவுதமி, ஸ்ரீமுகி ஆகியோரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.
சண்டை காட்சியில் அடிபட்டது உண்மை தான்
இந்த படத்தின் ட்ரெய்லரில் சமந்தா வில்லன்களை துவம்சம் செய்யும் வகையில் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மா இன்டி பங்காரம் படத்தை சமந்தா தன்னுடைய ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படமானது ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் இப்படம் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து படக்குழு பல்வேறு இடங்களிலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது.
அந்த வகையில், சென்னையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சமந்தாவிடம், “மா இன்டி பங்காரம்” படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளில் நடித்தது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தான் நன்றாக புரியும். அதில் ஸ்லோ-மோஷன் காட்சிகள், பறக்கும் காட்சிகள் போன்றவை எந்தவிதமான முன்னேற்பாடு எதுவும் செய்யாமல் தத்ரூபமாக அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகளில் அடி ஒவ்வொன்றும் ரியலாக விழுந்தது. நானும் நன்றாக அடி வாங்கினேன். இதில் சில நேரங்களில் எனக்கு ரத்தமே வந்திருக்கிறது. எல்லா சண்டைக் காட்சிகளிலும் நான்தான் டூப் பயன்படுத்தாமல் நடித்தேன். எனக்கு அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கப் பிடிக்கிறது” என சமந்தா தெரிவித்தார்.
Also Read: Actress Imaya: விஜய் vs உதயநிதி .. யார் உங்க ஃபேவரைட்? .. தங்கம் தென்னரசு மகள் கொடுத்த ஷாக் பதில்!
கணவர் ராஜ் நிடிமொரு பற்றி புகழாரம்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா தன்னுடைய கணவர் ராஜ் நிடிமொருவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது, “எங்கள் உறவைப் பொறுத்தவரை இருவருக்குமிடையே பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. ஒவ்வொரு முக்கியமான முடிவும் ஒன்றாகவே விவாதிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. அது வேலை அல்லது வாழ்க்கை சம்பந்தப்பட்டாக இருந்தாலும் சரி தங்களுக்குள் உரையாடலாக மாறியே முடிவுக்கு செல்கிறது.
சினிமா தொடர்பான ஆலோசனைகளுக்காக மட்டும் தான் என் கணவரை நான் நாடுவதில்லை. அவர் இந்தத் துறையில் இருந்தாலும், விஷயங்களைப் பற்றி அவருக்கு மிகவும் யதார்த்தமான கண்ணோட்டம் இருக்கிறது.99 சதவிகிதம் வரை நான் அவர் சொல்வதைக் கேட்பேன். எனவே, வீட்டில் அப்படிப்பட்ட ஒரு துணைவர் இருப்பது மிகவும் அருமையான விஷயம் என அவர் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















