Samantha: சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறாரா சமந்தா? இதுவா காரணம்?
சமந்தா தற்போது ரஷோ பிரதர்களின் அடுத்த 'சிடாடெல்' படத்தில் நடிக்க உள்ளதால், அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
![Samantha: சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறாரா சமந்தா? இதுவா காரணம்? Samantha's social media detox for her upcoming film prep, russo brothers, vignesh shivan, kushi, shakuntalam, familyman Samantha: சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறாரா சமந்தா? இதுவா காரணம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/30/d557ee384505cf429d6f03fdbc00293e1661846420374501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்னிந்திய முன்னணி கதாநாயகி சமந்தா, சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவ்வாக இருப்பவர். தனது போட்டோ ஷூட், அடுத்த படங்கள் அன்றாட வாழ்க்கை உடற்பயிற்சி வீடியோக்கள் செல்லப்பிராணியின் புகைப்படங்கள் என தொடர்ந்து பதிவிட்டு வருவது அவரது வழக்கம். ஆனால் சில நாட்களாகவே இன்ஸ்டாகிராம் பக்கம் அவரைக் காணவில்லை. சமூகவலைகளில் வலைத்தளங்களில் இருந்து விலகி விட்டாரா சமந்தா என ரசிகர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையில் இருக்க, இன்னொரு பக்கம் வெளியாகி உள்ளது அதிர்ச்சி தகவல்.
சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.இதைத் தொடர்ந்து யசோதா, சாகுந்தலம், குஷி என பிற திரைப்படங்களின் ரிலீஸ்காகவும் காத்திருக்கிறார்.
சோசியல் மீடியா டிடாக்ஸ்:
View this post on Instagram
சினிமா வட்டாரங்களில் கிடைத்துள்ள தரவுகளின் படி, சமந்தா தற்போது ரஷோ பிரதர்களின் அடுத்த 'சிடாடெல்' படத்தில் நடிக்க உள்ளதால், அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமந்தா தன்னுடைய மொத்த நேரத்தையும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தன் முன்னேற்றத்திற்காகவே செலவழிக்க விரும்புவதாகவும், அதற்காக அவர் சோசியல் மீடியா டிடாக்சில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிடாடெல் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக அவர் தற்காப்பு கலை பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம் சமந்தா. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்டதாகவும் அடுத்தபடியாக அவரது படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் அவரது சமூக வலைதளத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் தரவுகள் கூறுகின்றன.
சமந்தாவின் இந்த சோசியல் மீடியா டிடாக்ஸ் சிறிதுகாலம் தான் போல் தெரிகிறது.எனவே ரசிகர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. படத்திற்கான வேலைபாடுகள் முடிந்த பிறகு அவர் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | Cobra Movie First Review: வெளியான கோப்ரா ரிவியூ! விக்ரமுக்கு இது மைல்கல்! புகழ்ந்துதள்ளிய முக்கிய நபர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)