மேலும் அறிய

Samantha Ruth Prabhu | கொஞ்சம் பயமா இருக்கு - விவாகரத்துக்குப் பின் சமந்தாவின் ஆன் ஸ்கிரீன் ஷோ!

விவாகரத்து அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முதலாக சமந்தா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

டோலிவுட்டின் பிரபல நடிகர் என்டிஆர்  தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்)  நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டுள்ளார். கோடீஸ்வரன் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி ஆகும். பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு ரூ.1000 முதல் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த தொகையானது ரூ.1கோடி வரை செல்லும். 

ஒவ்வொரு மொழியிலும் புகழ்பெற்ற நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். அதன்படி தற்போது சீசனை தெலுங்கில் என் டி ஆர் தொகுத்து வழங்குகிறார். இந்த  நிகழ்ச்சியிலேயே தற்போது சமந்தா பங்கேற்றுள்ளார். விவாகரத்துக்கு பிறகான முதல் பொது நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இது தொடர்பான ப்ரோமா ஜெமினி டிவி வெளியிட்டுள்ளது. அதில் தனக்கு கொஞ்சம் பயமாக இருப்பதாக சமந்தா கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் என் டி ஆர், ஆமாம் ஏனென்றால் அது ஹாட் சீட்.. இது ஹோஸ்ட்சீட் என பதிலளிக்கிறார். இந்த ப்ரோமாவை சமந்தா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Gemini TV (@geminitv)

நடிகை  சமந்தா கலந்து கொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி தசரா திருநாளின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னதாக, அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டதாக சினிமா வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டிருந்தாலும், விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு தற்போது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தான் தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். ஏன் விவாகரத்து என ரசிகர்கள் பலர் பல்வேறு யூகங்களை வெளியிட்ட நிலையில் அது குறித்தும் சமந்தா மன வருத்தத்தை பதிவு செய்தார். 

Samantha Ruth Prabhu | கொஞ்சம் பயமா இருக்கு - விவாகரத்துக்குப் பின் சமந்தாவின் ஆன் ஸ்கிரீன் ஷோ!

அதில், ''எனக்கு எதிரான வதந்திகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான உங்களின் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்கிறது. என் மீது பல வதந்திகள் பரபப்படுகின்றன. நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். விவாகரத்து என்பதே வேதனையான ஒன்றுதான். தனி ஆளாக அந்தக் காயத்திலிருந்து மீள எனக்கு நேரம் எடுக்கும். இதற்கிடையே என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget