Samantha: விவாகரத்துக்கு முன் வாழ்ந்த வீடு.. பெரிய தொகை கொடுத்து வாங்கிய சமந்தா! தயாரிப்பாளர் சொன்ன தகவல்
நாகசைதன்யாவும், சமந்தாவும் வாழ்ந்த வீட்டை, சமந்தா பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்.
நாகசைதன்யாவும், சமந்தாவும் வாழ்ந்த வீட்டை, சமந்தா பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்.
பிரபல நடிகையான சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். முன்னதாக இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் வாங்கிய பிரம்மாண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதனிடையே இருவரும் விவாகரத்து செய்து கொண்டதால், அந்த வீட்டில் இருந்து வெளியேறினர்.
An Eye Opener for #Nagachaitanya Fans From MuraliMohan Garu@Samanthaprabhu2 Bought the Same House Again After Divorce With Her Own Money by Giving extra Profit to owners they sold
— Sai Sunil Reddy (@SaiSunil452) July 28, 2022
The House is Owned By #SamanthaRuthPrabhu
Inkosari #Samantha ki free ga iccharu ante pagiliddhi pic.twitter.com/2s6wywrRCB
இந்த நிலையில் அந்த வீட்டை மீண்டும் பல கோடி ரூபாய் கொடுத்து சமந்தா வாங்கியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் முரளி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய முரளி, “ சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனியா ஒரு வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தனர். இதனிடையே அவர் விவாகரத்து செய்து கொண்ட நிலையில், அவர்கள் அந்த வீட்டை முறைப்படி வேறு ஒருவருக்கு விற்றனர். ஆனால் சமந்தா மீண்டும் அந்த வீட்டை வாங்க முடிவு செய்தார். அதற்காக கடுமையாக உழைத்து, பணத்தை சிலரிடம் இருந்து பெற்று மீண்டும் அந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். இப்போது அவர் அவரது அம்மாவுடன் அங்கு வசித்து வருகிறார்” என்று பேசினார்.
View this post on Instagram
முன்னதாக, பிரிவின் போது நாக சைதன்யா 250 கோடி மதிப்புள்ள வீட்டை சமந்தாவிடம் கொடுத்து விட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, அந்தத்தகவலை கேட்டவுடன் நிச்சயம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏதாவது ஒரு நாள் என் வீட்டிற்கு வரப்போகிறார்கள், அவர்களிடம் எனக்கு எதுவும் கிடைக்க வில்லை என்று காண்பிக்க போகிறேன் என்று நினைத்து இருந்தேன். 250 கோடி என்பது மிகப் பெரிய தொகை என்பதை மக்கள் உணர்ந்த பிறகு அந்த வதந்தி தானாகவே மறைந்து விட்டது” என்றார்.