மேலும் அறிய

Sachin Wishes Rajini: தலைவா.... சூப்பர் ஸ்டாருக்கு மாஸ்டர் பிளாஸ்டர் வாழ்த்து!

தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவருக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது நேற்று வழங்கப்பட்டது. 45 ஆண்டுகள் கலை சேவைக்காக அவருக்கு இந்த விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினியிடம் வழங்கினார். 

இந்திய சினிமாவில் உச்ச விருதாக கருதப்படும் இவ்விருதை இதற்கு முன் செவாலியே சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், நடிகர் அமிதாப் பச்சன் பெற்றிருக்கின்றனர். தமிழில் சிவாஜி, பாலச்சந்தருக்கு பிறகு ரஜினிகாந்த் இவ்விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விருதை அவர் தனது குருநாதர் பாலச்சந்தர், அண்ணன் சத்யநாராயணா, நண்பர் ராஜ்பகதூர் உள்ளிட்டோருக்கு சமர்ப்பித்தார். மேலும், இந்த விருது பெறுவதற்கு என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ்நாடு மக்கள்தான் காரணம் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

விருது பெற்ற அவருக்கு பலர் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும் போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு.

தலைவா.... ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார் & தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினியை நேரில் அழைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget