மேலும் அறிய

RRR Wins Saturn Award :50வது சாட்டர்ன் விருது: சிறந்த சர்வதேச திரைப்பட விருதை வென்றது 'RRR'

50 வது சாட்டர்ன் விருதுகளில் ’ஆர் ஆர் ஆர்' சிறந்த சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது.

50 வது சாட்டர்ன் விருதுகளில் ’ஆர் ஆர் ஆர்' சிறந்த சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது. 

‘ஆர் ஆர் ஆர்’ நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் ​​50வது சாட்டர்ன் விருதுகளில் , எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த அதிரடி சாகசம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம் விருதை பெற்றுள்ளது.

விருதைப் பெற எஸ்.எஸ்.ராஜமௌலி நேரில் செல்ல முடியவில்லை என்றாலும், அவரது ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது.

"எங்கள் திரைப்படம் ஆர் ஆர் ஆர் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் சாட்டர்ன் விருதை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் ஒட்டுமொத்த குழு சார்பாக நடுவர்களிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது சாட்டர்ன் விருது. முதல் விருதை பாகுபலி: தி கன்க்ளூஷன்குப் பெற்றேன். நான் நேரில் வர விரும்பினேன், ஆனால் ஜப்பானில் ஆர் ஆர் ஆர் விளம்பரங்கள் தொடர்பான எனது முந்தைய கடமைகள் காரணமாக,  என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மற்ற வெற்றியாளர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். நமஸ்தே,”என்று சாட்டர்ன் அவார்ட்ஸின் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில் கூறினார்.

சிறந்த அதிரடி சாகசப் பிரிவில், 'Death on the Nile', 'F9: The Fast Saga', 'No Time to Die', 'Top Gun: Maverick' மற்றும் 'West Side Story' போன்றவற்றுடன் 'RRR' போட்டியிட்டது. '. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில், 'Downton Abbey: A New Era', 'Eiffel, I'm Your Man', 'Riders of Justice' மற்றும் 'Silent Night' போன்ற படங்களுக்கு எதிராக 'RRR' போட்டியிட்டது.

சிறந்த இயக்குனர் பிரிவில், எஸ்.எஸ்.ராஜமௌலி சிறந்த இயக்குனர் கோப்பைக்காக கில்லர்மோ டெல் டோரோ (Nightmare Alley), ஜோசப் கோசின்ஸ்கி (Top Gun: Maverick), ஜோர்டான் பீலே (Nope), மாட் ரீவ்ஸ் (The Batman), ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (West Side Story), மற்றும் ஜான் வாட்ஸ் (Spider-Man: No Way Home)ஆகியோருக்கு எதிராக போட்டியிட்டார்.

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  இந்தப்படம் உருவாகியுள்ளது.

படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. இந்நிலையில்  ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகளவில் 1200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget