ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
விஜயின் தனிச் செயலாளர் மற்றும் ரூட் பி ஆர் ஏஜன்சியின் நிறுவனருமான ஜகதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜகதீஷ்
"18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் ஒரு தீவிர ரசிகனாக வரிசையில் நின்றேன். இன்று, மாநிலத்தின் 'முதலமைச்சரின் தனிச் செயலாளர்' என்ற நிலையில் உங்கள் அருகில் நிற்கிறேன். வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்துள்ளது . இன்று நான் அடைந்துள்ள இந்த நிலைக்கு முழுக்காரணமும் நீங்கள்தான்.
மனதளவில் நான் எவ்வளவு சோர்வாகவோ அல்லது கவலையாகவோ இருந்தாலும், உங்கள் முகத்தில் மலரும் அந்த ஒரு புன்னகையும், உங்களைச் சுற்றியுள்ள நேர்மறையான அதிர்வுகளும் என் மனநிலையை உடனடியாக மாற்றியமைத்துவிடுகின்றன. எனது கடினமான காலங்களில் நான் இன்னும் வேகமாக முன்னேறத் தேவையான உத்வேகத்தையும் ஆற்றலையும் நீங்கள் எனக்கு அளித்தீர்கள். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எனது தெய்வமான தளபதி விஜய் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் இன்னும் பல உயரிய நிலைகளை அடையவும், தமிழக மக்களுடன் இணைந்து ஒரு சிறப்பான பயணத்தைத் தொடரவும் வாழ்த்துகிறேன்." என கூறியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















